2025 மே 01, வியாழக்கிழமை

ஹெரோயினுடன் மூவர் கைது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 06 , மு.ப. 11:23 - 0     - 11

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் ஹெரோயினுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்புப் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (4) 2 கிராம் 780 மில்லி கிராம் ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் நாவற்குழி பகுதியையும், ஒருவர் குருநகர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

எஸ் தில்லைநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .