2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வீட்டுக்குள் புகுந்த பொலிஸ் ஜீப்

Janu   / 2024 ஜூன் 05 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - புளியங்குளம் பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப்ரக வாகனம் திடீர் என கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்து வீட்டுடன் மோதி விபத்திற்குள்ளான  சம்பவம் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றுள்ளது .  

இதனால் குறித்த வீடு சேதமடைந்ததுடன், வீட்டு உரிமையாளரது மோட்டார் சைக்கிளும்,பொலிஸ் வாகனமும் சேதமடைந்துள்ளது.

இதேவேளை குறித்த வீட்டில் தனியார் வகுப்புக்கு வந்த 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விபத்து இடம்பெறுவதற்கு சிறிது முன்பு குழுமியிருந்த நிலையில் சிறிது நேரத்திற்கு முன்பே வீட்டின் உட்பகுதிக்கு சென்றிருந்தமையினால் உயிர் ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வாகனத்தை புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே செலுத்தி வந்ததாகவும், அவரும் ஏனையோரும் மதுபோதையில் இருந்ததாகவும் வீட்டு உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .