2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வாகனங்களுக்கு தீ வைப்பு ; பெண் வைத்தியசாலை அனுமதி

Janu   / 2024 செப்டெம்பர் 08 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் வேன் ஒன்றுக்கும், கார் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்ட சம்பவம் சனிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் மற்றும் கார் மீது , மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு , வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.  

அதனை கண்ணுற்ற வீட்டார் தீயினை அணைக்க முயன்ற போது , வாகன உரிமையாளரின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது .

எம் . றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .