2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாகன பற்றரிகள் திருட்டு ; இருவர் கைது

Janu   / 2024 டிசெம்பர் 17 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் வாகன பற்றரிகளை தொடர்ச்சியாக திருடிய குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகன தரிப்பிடத்தில் வாகன பற்றரிகள் களவாடப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய ​விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரால் நான்கு வாகன பற்றரிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த குற்றச்செயலுக்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கரவண்டி ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னினைப்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 

க. அகரன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X