2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

வவுனியாவில் 600 நோயாளர்கள் பாதிப்பு

R.Tharaniya   / 2025 மார்ச் 18 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் சுகாதார தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மருந்தகங்கள், ஆய்வகங்கள், கதிரியக்க சேவைகள், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல சுகாதாரம், கண் மருத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பகுதியினர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வவுனியாவிலும் பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக வவுனியாவில் பொது வைத்தியசாலைக்கு ஹெப்பிட்டிகொல்லாவ, பதவியா, உட்பட தூர இடங்களில் இருந்து வரும் 600க்கு மேற்பட்ட நோயாளிகள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் திரும்பி செல்வது அவதானிக்க கூடியதாக உள்ளது. 

குறிப்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கு 600க்கு மேற்பட்ட நோயாளிகள் உட்பட மொத்தமாக 1000 பேர் வரை நாளாந்தம் மருத்துவ தேவைக்காக வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X