2025 ஏப்ரல் 05, சனிக்கிழமை

ரயில்களில் மோதுண்டு இருவர் உயிரிழப்பு

Janu   / 2025 மார்ச் 17 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு ரயில்களில் மோதி இருவர் பலியான சம்பவம், கிரிபத்கொடை மற்றும் பேசலையில் இடம்பெற்றுள்ளன.

கிரிபத்கொடயில்…

கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் ஹுனுபிட்டிய ரயில் கடவையில் உள்ள கோயிலுக்கு அருகில், புத்தளத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

சடலம் ராகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 பேசாலையில்…

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள பேசாலை ரயில் நிலையத்திற்கு அருகில்,  கொழும்பு கோட்டையிலிருந்து தலை மன்னார் நோக்கி திங்கட்கிழமை (17) சென்ற ரயிலில் ஒருவர் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இறந்தவர் 22 வயதுடையவர் மற்றும் பேசாலையைச் சேர்ந்தவர் ஆவார்.

சடலம் மன்னார் மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேசாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X