Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Editorial / 2025 மார்ச் 21 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ். மாவட்டத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பான முழுமையான விபரத்தை யாழ். மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் மற்றும் பரிசீலனை நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்முறை தேர்தலுக்காக 148 கட்சிகளும் 27 சுயேட்சைக் குழுக்களுமாக கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
இதில் 136 கட்சிகளும் 23 சுயேட்சைக் குழுக்களும் நியமனம் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தன.
136 கட்சிகளுடைய நியமன பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனம் பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, 22 கட்சிகளுடைய நியமனம் பத்திரங்களும் 10 சுயேட்சைக் குழுக்களுடைய நியமனம் பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
யாழ் மாநகர சபைக்கான வேட்புமனுவில் தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஆகிய கட்சிகளுடைய வேட்புமனுக்களும், ஞானப்பிரகாசம் சுலக்சன், நரேந்திரன் கௌசல்யா ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் ராமச்சந்திரன் சுரேன், யோகேஸ்வரி அருளானந்தம் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை நகர சபைக்கான வேட்புமனுவில் அனைத்து வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், மகாலிங்கம் சதீஸ், பெரியான் சிவகுருநாதன் ஆகியோர் தலைமையிலான சுயேச்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
காரைநகர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வேலணைப் பிரதேச சபைக்கான வேட்புமனுவில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கட்சியினுடைய வேட்புமனுவும், துரைராஜா சுஜிந்தன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், சவரிமுத்து ஸ்டாலின் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஸ்ரீ இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், தமிழ் மக்கள் கூட்டணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், மக்கள் போராட்ட முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான வேட்புமனுவில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்களும், தவம் தவனிலாவின் தாசன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் அல்பிரட் ரெஜி ராஜேஸ்வரன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சாவகச்சேரி பிரதேச சபைக்கான வேட்புமனுவில், வைத்தியலிங்கம் ஜெகதாஸ் என்பவர் தலைமையிலான சுயேச்சை குழுவும் குணரட்ணம் குகானந்தன் என்பவர் தலைமையிலான சுயேட்சை குழுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
நல்லூர் பிரதேச சபைக்கான வேட்புமனுவில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி, ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் திலீப் தீபாரஞ்சன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
6 hours ago