Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Janu / 2024 மார்ச் 10 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதலையினால் கடியுண்டு படுகாயமடைந்த நிலையில் பெண்ணொருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் . கடந்த வியாழக்கிழமை ( 07) இடம்பெற்றுள்ளது .
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பின் மன்னாகண்டல் வசந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 47 வயதுடைய சாமிநாதன் விசாலாட்சி என்ற பெண்ணே இவ்வாறு முதலையினால் கடியுண்டு காயமடைந்துள்ளார் .
குறித்த பெண் தமது வாழ்வாதாரத்திற்காக வளர்க்கப்படும் ஆடுகளை குடிநீருக்காக பேராற்றிற்கு கொண்டு சென்ற போதே, முதலை குறித்த பெண்ணின் வலது கையினை கடித்துள்ளதாக தெரியவந்துள்ளது .
இதில் படுகாயமடைந்த பெண் உடனடியாக முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரியவந்துள்ளது .
மேலும் , இதே போன்று 20 நாட்களுக்கு முன்னரும் இப்பகுதியில் மாடு மேய்ச்சலில் ஈடுபட்ட ஒருவர் பேராற்று பகுதிக்கு சென்ற போது முதலையினால் கடியுண்டு காலில் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நடராசா கிருஸ்ணகுமார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
2 hours ago