Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை
R.Tharaniya / 2025 ஏப்ரல் 06 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தி தமது இளம் சந்ததியினரை காப்பாற்றுமாறு கோரி மக்கள் போராட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை (06) ஈடுபட்டனர்
மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகம் முன்பாக தமது கிராமத்தில் போதை பொருள் பாவனையால் பல்வேறு சமூக சீரழிவுகள் இடம் பெற்று வருவதாகவும் அதனை உடனடியாக உரியவர்கள் கட்டுப்படுத்தி எமது இளம் சந்ததியினர் மற்றும் கிராம மக்களை பாதுகாக்குமாறு கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
‘மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம்”, ‘உழைத்து வாழ பழகு ஊரை அழித்து வாழாதே” , ‘போதைப்பொருளை ஒழிப்போம் விஷமிகளை அழிப்போம்”, ‘போதையால் ஊரை அழிக்கிராயே உன் சந்ததி மட்டும் நிலைத்து வாழுமா”, போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை தாங்கியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இறுதியில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு போராட்டத்தைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபடுவதாக அடையாளப்படுத்தப்பட்ட மூன்று வீடுகளுக்கு சென்ற மக்கள் அவர்களது வீட்டு வாசல்களில் பதாகைகளையும் காட்சிப்படுத்தி விட்டு சென்றிருந்தனர்.
சண்முகம் தவசீலன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago