2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட இருவர் கைது

Janu   / 2024 மார்ச் 06 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்து  டிப்பர் வாகனமும், மோட்டார்ச் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்ட சம்பவம் புதன்கிழமை (06)  பதிவாகியுள்ளது .

நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்றை சாவகச்சேரி  போக்குவரத்து பொலிஸாரால்  வழி மறித்த போது  குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளதையடுத்து டிப்பர்  வாகனத்தை துரத்திச்  சென்ற பொலிஸார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர்.

இதன்போது டிப்பர் சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த  இருவர் உட்பட மூவரும் இணைந்து  பொலிஸார் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளதாகவும் அவர்களை  நகரப் பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் சுற்றி வளைத்து  இருவரை கைது செய்துள்ளதுடன்  எனினும் டிப்பர் வாகனத்திற்கு முன்பாக  வழிகாட்டி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.

மேலும் மணல் கடத்தி வரப்பட்ட டிப்பர் வாகனத்தையும் மோட்டார் சைக்கிளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன்  தப்பிச் சென்றவரை கைது செய்ய சாவகச்சேரி பொலிசஸார்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

டி.விஜித்தா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .