2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாரிய தீ விபத்து : பெறுமதியான பொருட்கள் நாசம்

Janu   / 2024 ஜூன் 25 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்று திடீரென தீ பற்றிய சம்பவம் திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது .

வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழில்சாலையில் பணி புரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் அப் பகுதி மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர  நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும் தீ விபத்தில் தொழிற்சலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் நாசமாகியுள்ளது.

இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

க. அகரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .