2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பருத்தித்துறைக்கு விஜயம்

Editorial   / 2024 நவம்பர் 28 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். தில்லைநாதன்

சீரற்ற காலநிலை காரணமாக பருத்தித்துறை வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில்  அதிக பாதிப்புக்கு உள்ளான  கற்கோவளம் புனித நகர் கிராமத்துக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா

  வியாழக்கிழமை (28) முற்பகல் காலை திடீர் விஜயம் மேற்கொண்டு கள நிலவரம் தொடர்பில் ஆராய்ந்தார்.

கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இப் பிரிவுக்குட்பட்ட புனித நகர் கிராமம் வெள்ளத்தால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

 அப் பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்ய கொண்டா வெள்ள நிலைமையை தொடர்பில் ஆராய்ந்ததுடன் கிராம மக்களிடமும் கலந்துரையாடினார். இதன் போது கிராமத்தில் ஏற்பட்ட இடர்பாடு தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு தான் கொண்டு செல்வதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .