Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Janu / 2024 ஜூன் 02 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் , கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் , நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்கள் ஆகியும் வெளிநாட்டு பயணம் சரி வராததால் , கொடுத்த பணத்தினை இளைஞன் திருப்பி கேட்ட போது , போதகர் காசோலையை வழங்கியுள்ளார்.
காசோலையை வங்கியில் வைப்பு செய்த போது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது. அதை அடுத்து போதகரை இளைஞன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் , தன்னால் என்னவும் செய்ய முடியும் என இளைஞனை மிரட்டியுள்ளார்.
அதனை அடுத்து இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , நீர்கொழும்பில் வைத்து போதகரை கைது செய்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் போதகரை முற்படுத்திய போது , அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது .
எம்.றொசாந்த்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago