2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

“நான்கு சபைகளையும் கைப்பற்றுவோம்“

R.Tharaniya   / 2025 மார்ச் 20 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் நான்கு உள்ளூராட்சி சபைகளில் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுப் பத்திரங்களைக் கையளித்திருந்த நிலையில், குறித்த நான்கு உள்ளூராட்சி சபைகளும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளப்பட்டன.


இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி கைப்பற்றும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தினைச் செலுத்தி, உரிய முறையில் வேட்புமனுக்களை கையளித்தோம்.

இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கும், மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரன் அவர்கள் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நான்கு உள்ளூராட்சி சபைகளுக்குமான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவது மிகவும் மகிழ்ச்சியான செய்தி
அந்த வகையில் நான்கு உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் - என்றார் துரைராசா ரவிகரன்.

விஜயரத்தினம் சரவணன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X