2025 ஜனவரி 02, வியாழக்கிழமை

நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Janu   / 2024 ஒக்டோபர் 30 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது  உறவுகளுக்கு நீதி கோரி  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைந்துள்ள குறித்த அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக  புதன்கிழமை (30-10-2024) அன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகள்,  தங்களுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையும் உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றையோ அல்லது இழப்பீடுகளையும் வழங்குவதையோ ஏற்பதில்லை  இந்த அரசு தொடர்ந்து ஏமாற்று வருகிறது  தங்களுக்கு சர்வதேச மட்டத்திலான ஒரு விசாரணை மேற்கொள்ளப்பட்டு தங்களுக்கான நீதியை பெற்றுத் தர வேண்டும் என  கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

யது பாஸ்கரன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X