2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

துப்பாக்கி ரவைகள் மீட்பு

Janu   / 2024 ஜூலை 14 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பூநகரி சின்னப்பல்லவராயன்கட்டு கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து துப்பாக்கி ரவைகள், சனிக்கிழமை (13) மாலை 06.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன.  

ஆடு ஒன்றினை காணவில்லை என தேடிச் சென்ற போது  கிணற்றில் உரப்பையொன்று மிதப்பை கண்டு அதனை மீட்டு பிரித்து பார்த்த போது துப்பாக்கி ரவைகள் இருந்ததை கண்ட பொது மக்கள்,  இது தொடர்பில் பூநகரி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதற்கமைய குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் , துப்பாக்கி ரவைகளை மீட்டு அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

நடராசா கிருஸ்ணகுமார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .