2025 ஏப்ரல் 19, சனிக்கிழமை

தீயில் ஆறு மாத கர்ப்பிணி மரணம்

Janu   / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி  பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த ஆறு மாத கர்ப்பிணியான சதீஸ் தமிழினி (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று  படுக்கையறையில் இருந்த நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியமையால் , தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர்  ​சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (16)  உயிரிழந்துள்ளார்.

அவரை காப்பாற்ற முயன்ற , கணவரும் சிறு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 எம் . றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X