2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

திருந்தாத சிறுவயது காதலர்கள்

Janu   / 2024 ஜூன் 05 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவயது காதல் ஜோடியொன்று , நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனும் , 16 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த நிலையில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். 

நீதிமன்ற விசாரணைகளையடுத்து, இளைஞனுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று , சிறுமியை சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு கட்டளையிட்டது. 

இந்நிலையில் இருவரது தண்டனை காலங்களும் நிறைவடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியவர்கள் , மீண்டும் தமது வீட்டை விட்டு வெளியேறி , யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தங்கிருந்துள்ளனர். 

இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .

எம்.றொசாந்த் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .