2024 டிசெம்பர் 21, சனிக்கிழமை

டீசல் திருட்டு ; 80 லீட்டர் மீட்பு

Janu   / 2024 ஓகஸ்ட் 12 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் டீசல் திருடிய கும்பல் ஒன்று தப்பிச் சென்றுள்ள நிலையில், திருடப்பட்ட 80 லீட்டர் டீசல் மீட்கப்பட்டுள்ளது. 

கடந்த 09 ஆம் திகதி இரவு காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் தரித்து நின்ற ரயில்களை , அதிகாரிகளால் கண்காணித்த போது ,திருட்டு கும்பல் ஒன்று ரயில் இயந்திரத்தில் இருந்து டீசல் திருடிக்கொண்டிருப்பதை கண்ணுற்று அவர்களை பிடிக்க முற்பட்ட போது அவர்கள் தப்பி சென்றுள்ளனர். 

இதன் போது அவர்கள் கொண்டு வந்திருந்த 20 லீட்டர் கொள்வனவு உடைய 04 கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்ட நிலையில் அதை கைவிட்டு தப்பி சென்றிருந்தனர். 

அவற்றை மீட்ட அதிகாரிகள் , சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

 எம் . றொசாந்த் 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .