2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

சந்தை கடை தொகுதியில் தீ பரவல்

Janu   / 2024 ஜூலை 30 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச் சந்தை கட்டத்தில் அமைந்துள்ள  கடைத் தொகுதிகளில் மூன்று கடைகளில் செவ்வாய்க்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற தீ பரவலில் பாரிய சொத்தழிவு ஏற்பட்டுள்ளது

இரண்டு கடைகள் மற்றும் களஞ்சியம் ஒன்றும் இதன் போது சேதமடைந்துள்ளன.இரண்டு கடைகளும் முற்றாக எரிந்துள்ளதுடன் கடையில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயினால் எரிந்து சாம்பலாகி உள்ளது.

காவலாளிகள் மற்றும் அதில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

இந்த தீ பரவல் மின்சார கசிவால் ஏற்பட்டிருக்கும் என சந்தேக படுவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்றக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .