2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Janu   / 2024 ஜூன் 10 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன், வடமராட்சி வல்லிபுரம் காட்டுப் பகுதியில் வைத்து  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரவெட்டி யாக்கரு விசேட அதிரடிப் படையினருடன் இணைந்து பருத்திதுறை, வல்லிபுரம் காட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 02 சாக்குகளில் அடைக்கப்பட்ட ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 60 கிலோ கிராம் கேரள கஞ்சா பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது .

இதன் போது வத்திராயன் பகுதியைச் சேர்ந்த  25 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் , மீட்கப்பட்ட கஞ்சாவும் கைது செய்யப்பட்டவரும் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நிதர்ஷன் வினோத் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .