Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Janu / 2024 ஜூலை 30 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவாலி வடக்கு ஜே/134 கிராம சேவகர் பிரிவில் கிராம சேவகரின் உதவியாளராக பெண்ணொருவர் செயற்பட்டு உதவித் திட்டங்களில் பாகுபாடு காட்டுவதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குறித்த கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டார்.
வருகின்ற உதவித் திட்டங்களை தனக்கு விரும்பியவர்களுக்கு வழங்குவதாகவும், பொதுக் கூட்டங்களுக்கு சமூகமட்ட பொது அமைப்புகளுக்கு அறிவித்தல் வழங்குவதில்லை என்றும், பொதுவான இடங்களில் கூட்டத்திற்கான அழைப்பு அறிவித்தல் ஒட்டப் படுவதில்லை என்றும், தனக்கு விரும்பியவர்களுக்கு தொலைபேசி மூலம் அறிய தருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பான முறைப்பாடு தான் ஏற்கனவே அரசாங்க அதிபர் மட்டத்துக்கு கொண்டு சென்ற நிலையில் இதற்கு முன்னர் இருந்த கிராம சேவகர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும், புதிதாக வந்த கிராம சேவகரும் ஒரு வருடம் கழிந்த பின்னர் அந்த பெண்ணின் கருத்துப்படி செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கத்தால் வழங்கப்படும் வாழ்வாதாரங்களும் பாகுபாடு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு செய்ய வேண்டாம் என்று தான் பலமுறை கூறி முரண்பட்ட நிலையில், தான் பயங்கரவாதத்தை மீளுருவாக்க செய்யவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மொட்டை கடிதம் மூலம் முறைப்பாடு செய்து, பழிவாங்கும் முகமாக தன்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைத்ததாகவும் கூறுகிறார்.
மேலும் , திங்கட்கிழமை (29) அன்று போராட்டத்தில் ஈடுபட்ட வேளை அவ்விடத்திற்கு வந்த கிராம சேவகர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், செவ்வாய்க்கிழமை (30) அன்று இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட குறித்த பெண் தான் அனுப்பிய கடிதங்கள், தனக்கு கிடைத்த கடிதங்களை ஆடையில் தொங்கவிட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago