2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

காணி விடுவிப்பு தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடம் கோரிக்கை

Janu   / 2024 மார்ச் 05 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குனரத்னவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்  , பாதுகாப்பு அமைச்சில்  வைத்து செவ்வாய்க்கிழமை  (05) சந்தித்து கலந்துரையாடியுள்ளார் .

இதன்போது வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை, மீள்குடியேற்றம் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு விடுவிப்பது தொடர்பில்  ஆளுநரினால் பாதுகாப்புச் செயலாளரிடம் எடுத்துக்கூறப்பட்டதற்கமைவாக, காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தாம் பரிந்துரைகளை அனுப்புவதாக பாதுகாப்புச் செயலாளர் , வடக்கு மாகாண ஆளுநரிடம்  உறுதியளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .