2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

காச நோய் தொடர்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

R.Tharaniya   / 2025 மார்ச் 24 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் காசநோய்தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றுதிங்கட்கிழமை(24) இடம்பெற்றது.

வவுனியா, வைத்தியசாலை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலமானது யாழ் வீதியை அடைந்து வைத்தியசாலை சுற்று வட்ட வீதி ஊடாக கண்டி வீதியால் சென்று மணிக்கூட்டு கோபுர சந்தி ஊடாக பசார் வீதியை அடைந்து ஹொரவப் பொத்தானை வீதி ஊடாக வைத்தியசாலையை சென்றடைந்தது.

இதன்போது காசநோயை கட்டுப்டுத்துதல் தொடர்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் தாதியர்கள், நூற்றுக்கு மேற்பட்ட முச்சக்கர வண்டிகளும் கலந்துகொண்டன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X