Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 12 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுபீட்சமான ஒரு பிரதேசத்தை உருவாக்க உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் தமது சுயேட்சை குழுக்கு வாக்களிக்க வேண்டுமென பருத்தித்துறை பிரதேச சபையில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் முல்லைதிவ்யன் தெரிவித்துள்ளர் புதன்கிழமை (10) வடமராட்சி கிழக்கில் அமைந்துள்ள சமூக மாற்றத்திற்கான ஊடக மையத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்தார்.
எங்களுடைய மண்,மக்கள் நலனை பிரதான இலக்காக கொண்டு நாம் வரித்துக் கொண்ட தமிழ் தேச பற்றோடு பிரதேச அபிவிருத்தியின் பிரதான இலக்காக கொண்டு நாங்கள் உள்ளூராட்சி சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்றோம்.
சுயேட்சையாக களமிறங்கும் எமது குழுவில் தோட்ட வேலை செய்பவர்கள்,ஏழை மீனவர்கள்,கழிவு அகற்றும் தொழிலாளர்கள் உட்பட பல புத்திஜீவிகள் வேட்பாளராக களம் காண உள்ளனர்
கட்சிகள் தங்களுடைய சுய இலாபத்திற்காக வேட்பாளர்களை நிறுத்தி அதனூடாக வாக்குகளை அபகரித்து தங்களுக்கான சுய இலாபத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுவதன் ஊடாக எங்களுக்கு கிடைக்கின்ற ஆசனங்களை பயன்படுத்தி சுதந்திரமான தீர்மானங்களை நாமே எடுத்து எங்களுடைய பிரதேசங்களையும்,வட்டாரங்களை சிறப்பாக அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்
மக்கள் தூரநோக்கோடு சிந்திக்க வேண்டும். இன்று கட்சிகள் பலவாறாக சிதறுண்டு போயுள்ளன. ஆகவே இந்த கட்சிகளின் அரசியலுக்கு அப்பால் நாங்கள் சுயேட்சையாக போட்டியிடுவதற்கான பிரதானமான காரணம் கட்சிகளின் மேல் கொண்ட அதிருப்தியில்,மக்கள் மீதும் கொண்ட பற்றும் தான் நாங்கள் இன்று சுயேட்சை குழுவாக போட்டியிடுகின்றோம்
ஆகவே எமது சுயேட்சை குழுவை நீங்கள் ஆதரித்து எமது மக்களுக்கான தேவைப்பாட்டை, அடிப்படை வசதிகளை பிரதேச அபிவிருத்தி செய்வதற்கு எமது சுயேட்சை குழுவில் மக்கள் வாக்களிக்க வேண்டும்
கட்சிகளின் ஏமாற்று வேலையை நம்பாது எனக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் நிச்சயமாக, திடமாக, உறுதிப்பாடு, புதிய மறுமலர்ச்சி நோக்கிய சுபீட்சமான ஒரு பிரதேசத்தை உங்களால் நிச்சயம் ஏற்படுத்த முடியும் என தெரிவித்தார்.
பு.கஜிந்தன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago