2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கசிப்புடன் ஒருவர் கைது

Janu   / 2024 ஒக்டோபர் 17 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையின் போது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்புடன் 47 வயதுடைய ஒருவர்  வியாழக்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

அராலித்துறை பகுதியில் நீண்ட நாட்களாக குறித்த நபர் கசிப்பு விற்பனை செய்து வருவதாக இரகசிய தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றது.

இந்நிலையில் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் போது சந்தேகநபரின் வீட்டில் இருந்து ஏழு லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டது.  

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை  மல்லாகம் நீதிமன்றத்தில் முறைப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.  

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X