2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

கசிப்பு வியாபாரிகளின் வீடுகள் முற்றுகை ; அறுவர் கைது

Janu   / 2025 ஏப்ரல் 09 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுக்குடியிருப்பு பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் கிராமத்தில் கசிப்பு வியாபாரம் அதிகரித்து காணப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) அன்று மாணிக்கபுரம் கிராம அலுவலர் அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்  கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று குடும்பங்கள் மக்களால் இனங்காணப்பட்டு, அவர்களின் வீட்டுப் படலையில் துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.

இந்த நிலையில் இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் வீடுகளில் வைத்து கசிப்பு வியாபாரம் செய்து வந்த குறித்த மூன்று குடும்பங்களின் வீடுகள் புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சிறப்பு அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் புதன்கிழமை (09) காலை இந்த சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

இதன்போது ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 வீடுகளிலும்  விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 16. 5 லிட்டர் கசிப்பு  கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களையும் சான்றுப் பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சண்முகம் தவசீலன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X