2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஐவரில் ஒருவர் சிக்கினார்

Janu   / 2024 மே 30 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி , திருவையாறு பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருவையாறு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக சிலர்  தங்கி இருப்பது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய பொலிஸாரால்  குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது வீட்டில் , 2 கிராம் 100 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்தமையால் குறித்த வீட்டில் தங்கி இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட்ட ஐவர் செவ்வாய்க்கிழமை (28)  கைது செய்யப்பட்டிருந்தனர் .  

கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின்  சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில்  முற்படுத்தப்பட்டதுடன்  நீதிமன்ற உத்தரவுக்கமைய கடந்த இரு நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது .

இந்த விசாரணைகளின் அடிப்படையில் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த ஒருவர் அடையாளம் கானப்பட்டுள்ளதுடன் பின்னர் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட நான்கு பேர்  குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் 

இந் நிலையில் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்டவரை வியாழக்கிழமை (30) கிளிநொச்சி மாவட்ட நீதவான்  நீதிமன்றில்  ஆஜர் படுத்திய போது  அவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்க மறியல் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யது பாஸ்கரன் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .