Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mayu / 2024 மார்ச் 26 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் திங்கட்கிழமை (25) கார் ஒன்றில் சென்ற நால்வர் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மதுபோதையில் காரில் சென்ற நான்கு நபர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்று எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது தாக்கியதில் தாக்குதலை நிறுத்த சென்ற பொது நபர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கமைய, கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு இவ்வாறான செயற்பாடுதளை உடன் கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் இது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்
இந்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் மூவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிசார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago