2025 ஏப்ரல் 18, வெள்ளிக்கிழமை

ஊரவர்களால் பிடிக்கப்பட்ட யூடியூப்பர்

R.Tharaniya   / 2025 மார்ச் 09 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் youtube சேனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த youtuber பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளிகளை பதிவேற்றம் வந்த நிலையில் அந்த விடயம் சர்ச்சையாகி இருந்தது. இந்த விடயம் குறித்து பாராளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த youtuber க்கு எதிராக கருத்தை முன்வைத்து வந்தனர்.

இந்நிலையில் சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டுக்கு ஞாயிற்றுகிழமை(9)அன்று குறித்த YouTuber வந்திருந்த நேரம் ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை ​பொலிஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பு.கஜிந்தன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X