Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
R.Tharaniya / 2025 மார்ச் 20 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
"உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இந்த தேர்தல் முறைமையின் எந்த கட்சியாக இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம்.
ஆனால் நாங்கள் முயற்சி செய்கிறோம்" என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த பின்னர் யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலருடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் . இப்படியாகத்தான் பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒன்பது கட்சி கூட்டு பத்து கட்சிக் கூட்டு என பல செய்திகள் கூட்டுகள் வந்தன.
தப்பி தவறி ஒருவர் மட்டும் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார். எந்தவித தாக்கத்தையும் இந்த கூட்டு செலுத்தாது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறோம்.
மிகுதி 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை நாளை காலை சமர்ப்பிப்போம். நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியதாக இருக்கிறது. அதனால் சற்று நேரம் தாமதித்து தான் இறுதி செய்து கொண்டிருக்கிறோம். கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் முதல்வரோ தவிசாளரோ அறிவிக்கப்படப் போவதில்லை. தேர்தலுக்கு பிறகு தான் அது சம்பந்தமாக கட்சி முடிவு எடுக்கும்.
நிதர்சன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago