2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டி

R.Tharaniya   / 2025 மார்ச் 12 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு கிழக்கில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக மையத்தில்  புதன்கிழமை (12) நடைபெற்ற வாராந்த ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - ஈ.பி.டி.பி தனது தனித்துவத்துடன் அனைத்து தேர்தல்களிலும் முகங்கொடுப்பதாக கூறிவருகின்றது.

குறிப்பாக வடக்கின் ஐந்து மாவட்டங்கள் கிழக்கில் மூன்று மாவட்டங்கள்  உள்ளடங்கலாக வடக்கு கிழக்கில்  உள்ளூராட்சி   தேர்தலில் ஈ.பி.டி.பி தனது சின்னமான வீணைச் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளது. அதனடிப்படையில் தேர்தலில் எமது மக்கள் எமது கட்சிக்கு அணிதிரண்டு வாக்களித்து எம்மை வெற்றிபெறச் செய்வார்கள் என நம்புகின்றேன்“ என அக்கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந் தெரிவித்துள்ளார்.

நிதர்சன வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X