Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Janu / 2024 ஜூன் 11 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்திராபுரம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள புகையிரத பாதையில் பாதுகாப்பான கடவையில்லாமல் மக்கள் பெரும் அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
பாதுகாப்பு கடவை நீண்ட நாட்களாக இல்லாமல் இந்திராபுர மக்கள் பல அசெளகரியங்களை சந்தித்து வருகின்றனர்.தற்பொழுது போடப்பட்டிருக்கும் தற்காலிக பாதையானது கன்னிவெடி அகற்றும் பிரிவினரால் போடப்பட்டுள்ளது எனவும் குறித்த தற்காலிக பாதை 2012 ல் இருந்து தற்காலிக பாதையாக இருந்து வருகிறது.
இருப்பினும் இதுவரையில் நிரந்தர பாதுகாப்பான பாதை தமக்கு அமைத்து தரவில்லை எனவும் குறித்த விடயம் தொடர்பாக பல இடங்களில் தெரிவித்திருந்தோம் ஆனாலும் இதுவரையில் எந்தவொரு முடிவுகளும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அதே நேரத்தில் குறித்த பாதை மிகவும் சீரழிந்த நிலையில் உள்ளதாகவும் பாடசாலை மாணவர்கள் உட்பட கிராம மக்கள் பெரும் ஆபத்தான நிலையில் கடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கான பாடசாலைக்கு குறித்த புகையிரத கடவையை கடந்தே செல்ல வேண்டும் எனவும் 50ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் பாடசாலை சென்று வரும் வரையில் பெற்றோர்கள் அச்சநிலையலேயே தவித்து வருவதாகவும் 2016 ல் 2019 வரையில் சுமார் 200ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இக்கிராமத்தில் வசித்து வருவதாகவும் தொழில் நிமித்தம் மற்றும் அன்றாட தேவைகளுக்காக தினம் 1000ற்கும் மேற்பட்டவர்கள் குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல வேண்டுயுள்ளதாகவும் இதே புகையிரத கடவையில் கடந்த சில வருடங்களுக்கு முன் 16மாடுகள் புகையிரத்த்துடன் மோதுண்டு பலியான சம்பவங்களும் உண்டு.
எனவே பல தரப்புக்கள் அரசியல் பிரமுகர்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் கூறப்பட்டும் இதுவரையில் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மு.தமிழ்ச்செல்வன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago