2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ஆளுநரை சந்தித்த தேர்தல் கண்காணிப்பு குழு

Janu   / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் ,ஆளுநரின்  யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து திங்கட்கிழமை (09) அன்று சந்தித்து கலந்துரையாடினர்.   

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமான மற்றும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என இதன்போது  ஆளுநர் கூறினார். அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த  ஆளுநர் , மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .