2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை

அ.இ.த.கா கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

R.Tharaniya   / 2025 மார்ச் 12 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபை ​தேர்தலில் போட்டியிடுவதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
 
யாழ் மாவட்டத்தின் 17 சபைகளிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தமிழ் காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
 
இதற்கான கட்டுப்பணத்தை கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் யாழ் தேர்தல் திணைக்களத்தில் புதன்கிழமை (12) காலை செலுத்தியுள்ளார்.
 
இதேபோன்று வடக்கு கிழக்கு முழுவதும் சைக்கில் சின்னத்தில் தமது கட்சி போட்டியிட உள்ளதாகவும் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 
நிதர்சன வினோத்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X