2025 மார்ச் 14, வெள்ளிக்கிழமை

200 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Janu   / 2025 ஜனவரி 05 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்,200 போதை மாத்திரைகள் அடங்கிய பொதியுடன் இளைஞன் ஒருவன் முருங்கன் பஜார் பகுதியில் வைத்து சனிக்கிழமை(4) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த நபர் சிலாபத்துறை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.   

கைது செய்யப்பட்ட நபர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றதுடன் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .