2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை

1200 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

R.Tharaniya   / 2025 மார்ச் 30 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னாரில் இருந்து கொழும்பிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் சனிக்கிழமை (29) இரவு  முருங்கன் பகுதியில் வைத்து முருங்கன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட பின்னர் கொழும்பு கொண்டு செல்லப்பட்ட போது முருங்கன் பகுதியில் வைத்து குறித்த பீடி இலை மூடைகள் மீட்கப்பட்டதுடன்,சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

 மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முருங்கன் பகுதியில் வைத்து குறித்த வாகனம் சோதனையிடப்பட்டன.

இதன் போது 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 11  மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 1200 கிலோ கிராம் பீடி இலை மூடைகள் மீட்கப்பட்டதுடன், களனியைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு முருங்கன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X