Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜனவரி 28 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ச.விமல்
தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததன் மூலம் தமது முதலிடத்தை தென்னாபிரிக்க அணி இழந்தது. சொந்த நாட்டில் நடைபெற்ற தொடரில் 1 இற்கு 2 என்ற அடிப்படையில் 4 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாபிரிக்க அணி தோல்வியை சந்தித்தது.
மோசமான இந்திய தொடரின் மூலம் மிகப் பெரிய அடியை தென்னாபிரிக்க அணி எதிர்கொண்டது. சொந்த நாட்டில் மீள் வருகையை காட்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதும் அது நடைபெறவில்லை. ஆனால் தொடர் நிறைவில் அணித் தலைமை மாற்றம் தென்னாபிரிக்க அணியின் மீள் வருகையை காட்டுகின்றது. ஆக டீ வில்லியர்ஸிடம் இருந்து தலைமைத்துவத்தை மாற்றியமை பிழையான முடிவு என்பதை சிந்திக்க வைத்துள்ளது.
2015 ஆம்ஆண்டு மிக மோசமாக தென் ஆபிரிக்கா அணிக்கு அமைந்தது. ஹஷிம் அம்லாவின் தலைமையில் தென் ஆபிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை. அணியின் வீரர்கள் மாத்திரம் வெற்றி தோல்விக்கு காரணம் அல்ல. தெரிவுக் குழுவும் அதன் முடிவுகளும் கூட காரணம் என்பதை இந்த தொடர் முடிவு காட்டியுள்ளது.
இந்த தொடரில் முதற் போட்டியில் தோல்வியையும், அடுத்த போட்டியில் சமநிலை முடிவையும் பெற்ற பின்னர் ஹஷிம் அம்லா தனது பதவியில் இருந்து விட்டு விலகினார். மீண்டும் டீ வில்லியர்ஸ் அணித் தலைவராக பதவியேற்றார். அணி 2 போட்டிகளில் 1 தோல்வி. 1 வெற்றி. மீண்டும் குயின்டன் டி கொக் விக்கெட்காப்பாளராக இணைக்கப்பட்டார். சதம் அடித்தார். இந்திய டெஸ்ட் தொடரில் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும். ஒரு வீரர் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அபார போர்மில் ஓட்டங்களை குவித்த வரும் வேளையில் ஏன் டெஸ்ட் போட்டிகளில் அவரால் முடியாது? தெரிவுக்குழுவினரின் தவறுகள் அணிக்கு பின்னடைவை உருவாக்கும். ஒரு காலத்தில் இந்திய அணியின் தலைவராக சச்சின் இருக்கும் வேளையில் எனக்கு தேவையான அணியை தராமல், அவர்கள் தரும் அணியை வைத்து வெல்ல வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்? என கூறி இருந்தார். தென் ஆபிரிக்கா அணியின் தோல்விகளுக்கு பதில் கூற வேண்டியவர்கள் தெரிவுக் குழுவினரே.
ஆனாலும் தென்னாபிரிக்க அணியின் வீழ்ச்சி என்று மாத்திரம் நாம் இங்கே பேசிக்கொண்டு இருக்க முடியாது. இங்கிலாந்து அணியின் எழுச்சி. இது முக்கியமான விடயம். இங்கிலாந்து அணி மீண்டும் எழுந்து விட்டது. அதுவும் தென்னாபிரிக்க அணியின் தோல்விகளுக்கு ஒரு காரணம். கடந்த காலங்களில் இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காஅணியை அவர்கள் நாட்டில் வைத்து பல தொடர்களில் வெற்றி பெற்றுள்ளனர். எனவே இந்த தொடரில் தென் ஆபிரிக்கா அணி தோல்வியடைந்துள்ளது எனக் கூற முடியாது.
இங்கிலாந்து அணி துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு பக்கமாகவும் மிகச் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. பலமான தென் ஆபிரிக்கா அணியை அவர்கள் நாட்டில் வைத்து தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து வெற்றி பெறுவது என்பது இலகுவானது அல்ல. அதனை செய்தே தொடரைக் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி.
தொடர் மீள் பார்வை
முதற் போட்டி
இங்கிலாந்து அணி 241 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 303 ஓட்டங்களைப் பெற்றது.
நிக் கொம்ப்டன் - 80 , ஜேம்ஸ் ரெய்லர் - 75
டேல் ஸ்டைன் - 70/4 , மோர்னி மோர்க்கல் 76/4
தென்னாபிரிக்க அணி 214 ஓட்டங்களைப் பெற்றது.
டீன் எல்கர் - 118
ஸ்டுவர்ட் ப்ரோட் - 25/4 , மொயின் அலி 69/4
இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சில் 326 ஓட்டங்களைப் பெற்றது.
ஜொனி பெயார்ஸ்டோ- 79, ஜோ ரூட் 73
டனி பீடிட் - 153/5 , ஸ்டையான் வான் ஸில் - 20/3
416 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 174 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது.
டீன் எல்கர் - 40
ஸ்டீபன் பின் - 42/4, மொயின் அலி 47/3
போட்டி நாயகன் - மொயின் அலி
இரண்டாவது போட்டி
இந்தப் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது .
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 658 ஓட்டங்கள்.
பென் ஸ்டோக்ஸ் 258, ஜொனி பெயார்ஸ்டோ - 150(ஆட்டமிழக்காமல்)
399 ஓட்டங்களை ஆறாவது விக்கெட் இணைப்பாட்டமாக இருவரும் பெற்றனர். இது ஆறாவது விக்கெட்டுக்கான புதிய உலக சாதனை ஆகும்.
கஜிஸ்கோ ரபடா - 175/3
தென்னாபிரிக்கா - 627/7
ஹஷிம் அம்லா - 201, டெம்பா பவுமா - 102 (ஆட்டமிழக்காமல்)
ஸ்டுவர்ட் ப்ரோட் - 94/2, ஸ்டீபன் பின் - 132/2
இங்கிலாந்து 159/6 என்ற நிலையில் போட்டி சமநிலையில் நிறைவானது.
ஜொனி பெயர்ஸ்டோ- 30(ஆட்டமிழக்காமல்)
டனி பீடிட் - 38/3
போட்டியின் நாயகன் - பென் ஸ்டோக்ஸ்
மூன்றாவது போட்டி
இங்கிலாந்து அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்க அணி 313 ஓட்டங்களைப் முதல் இன்னிங்சில் .பெற்றது.
டீன் எல்கர் - 46, ஹஷிம் அம்லா - 40
பென் ஸ்டோக்ஸ் 53/3 , ஸ்டுவர்ட் ப்ரோட் - 82/2, ஸ்டீபன் பின் - 50/2
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 323 ஓட்டங்கள்.
ஜோ ரூட்ஸ் - 110, பென் ஸ்டோக்ஸ் 58
கஜிஸ்கோ ரபடா - 78/5, மோர்னி மோர்க்கல் 76/3
தென்னாபிரிக்க அணி 83 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்து 74 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
கஜிஸ்கோ ரபடா - 16
ஸ்டுவர்ட் ப்ரோட் - 17/6, பென் ஸ்டோக்ஸ் - 24/2
இங்கிலாந்து அணி மூன்று விக்கெட்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. .
அலஸ்டயர் குக் - 48
டீன் எல்கர் - 10/2
போட்டியின் நாயகன் - ஸ்டுவர்ட் ப்ரோட்
நான்காவது போட்டி
தொடரை இழந்த போதும் தென்னாபிரிக்க அணி நம்பிக்கையுடன் 280 ஓட்டங்களினால் வெற்றி பெற்று மீள் வருகை ஒன்றை உருவாக்கியது. .
தென்னாபிரிக்க அணி 475 ஓட்டங்களைப் முதல் இன்னிங்சில் .பெற்றது.
குயின்டன் டி கொக் - 129 (ஆட்டமிழக்காமல்) சீன் குக் - 115, ஹஷிம் அம்லா - 109
பென் ஸ்டோக்ஸ் 86/4 , ஸ்டுவர்ட் ப்ரோட் - 91/2, மொயின் அலி - 104/2
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 342
ஜோ ரூட்ஸ் - 76, அலஸ்டயர் குக் - 76
கஜிஸ்கோ ரபடா - 112/7, மோர்னி மோர்க்கல் 73/2
தென்னாபிரிக்க அணி 5விக்கெட்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்று 382 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது.
ஹஷிம் அம்லா - 96, டெம்பா பவுமா - 78(ஆட்டமிழக்காமல்)
ஜேம்ஸ் அன்டர்சன் - 47/3
இங்கிலாந்து அணி மூன்று 102 ஓட்டங்களைப் பெற்று 280 ஓட்டங்களினால் தொல்வியடைந்தது.
ஜேம்ஸ் ரெய்லர் - 24
கஜிஸ்கோ ரபடா - 32/6, மோர்னி மோர்க்கல் 36/3
போட்டியின் நாயகன் - கஜிஸ்கோ ரபடா
இங்கிலாந்து அணி துடுப்பாட்டம் , பந்துவீச்சு என மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். குறிப்பாக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் மிகச் சிறப்பாக துடுப்பாட்டம், பந்துவீச்சு என கலக்கி தொடர் நாயகன் விருதை தனதாக்கினார். துடுப்பாட்ட வரிசையில் ஒருவர் இல்லாவிட்டால், இன்னொருவர் என மிகச்சு சிறப்பாக இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் செயற்பட்டுள்ளனர். பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் மிகச் சிறப்பாக பந்துவீசியுள்ளார். பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினர்.
தென்னபிரிக்க அணியில் வேர்ணன் பிலாண்டர் இல்லாமை, டேல் ஸ்டைன் முதற் போட்டியின் பின் விளையாடமை மிகப் பெரிய பின்னடைவே. கஜிஸ்கோ ரபடா இறுதி போட்டிகளிலே போர்முக்கு வந்தார். மோர்னி மோர்க்கல் சராசரியாக விக்கெட்களை வீழ்த்திய போதும் இங்கிலாந்து அணியை அச்சுறுத்தும் அளவுக்கு பந்துவீசவில்லை. சுழற்பந்துவீசில் தென்னாபிரிக்க அணி கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். சரியான முறையில் அவர்களுக்கு அமையவில்லை. துடுப்பாட்டத்தில் டீ வில்லியர்ஸ் சோபிக்கத்தவறியமை தோல்விகளுக்கு முக்கிய காரணம். ஹஷிம் அம்லா தலைவராக சரியா செயற்படாத போதும் துடுப்பாட்டத்தில் கை விடவில்லை. குயிண்டன் டி கொக் மீண்டும் அணிக்குள் வந்துள்ளமை எதிர்காலத்தில் பலமாக இருக்கும் என நம்பலாம். ஆரம்ப ஜோடி இன்னமும் தென்னபிரிக்கா அணிக்கு பிரச்சினையாகவே உள்ளது. சில சில பிரச்சினைகள் காரணமாகவே தென்னாபிரிக்க அணி தோல்விகளை சந்தித்துள்ளது. அவற்றை சீர் செய்தால் மீண்டும் வெற்றி அணியாக முன்னேற்றம் காண முடியும்.
தொடர் ஆரம்பிக்கும் வேளையில் தரபப்டுத்தலில் முதலிடத்தில் இருந்த தென்னாபிரிக்க அணி முதலிரு தோல்விகளுடனும் முதலிடத்தை இழந்தது. இந்திய அணியிடம் தொடர் தோல்வியடைந்து புள்ளிகளை இழந்த தென்னபிரிக்க அணி இந்த தொடர் தோல்வியிலும் புள்ளிகளை இழக்க இந்திய அணி முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி ஐந்தாமிடத்தில் இருந்து நான்காமிடம் நோக்கி முன்னேறியுள்ளது. தென்னாபிரிக்க அணி மூன்றாமிடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளது.
200 இற்கு மேற்பட்ட ஓட்டங்களை இந்த தொடரில் பெற்றவர்கள்
ஹஷிம் அம்லா 4 7 470 201 67,14 46,90 2 1
பென் ஸ்டோக்ஸ் 4 7 411 258 58,71 109,01 1 1
ஜோ ரூட் 4 8 386 110 55,14 63,38 1 3
ஜொனி பெயார்ஸ்டோ 4 7 359 150 * 71,80 72,08 1 1
டீன் எல்கர் 4 7 284 118 * 47,33 49,47 1 0
டெம்பா பவுமா 4 7 248 102 * 49,60 54,50 1 1
நிக் கொம்ப்டன் 4 8 245 85 30,62 37,80 0 1
ஏபி டி வில்லியர்ஸ் 4 7 210 88 30,00 49,41 0 1
(போட்டி, இன்னிங்ஸ், மொத்த ஓட்டங்கள், கூடுதலான ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச் சதம் )
தொடரில் 10 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றியவர்கள்
கஜிஸ்கோ ரபடா 3 6 109,4 482 22 7/112 13/144 21,90 4,39
ஸ்டுவர்ட் ப்ரோட் 4 7 139,1 371 18 6/17 8/99 20,61 2,66
மோர்னி மோர்கல் 4 8 151,5 446 15 4/76 5/109 29,73 2,93
பென் ஸ்டோக்ஸ் 4 7 113,1 350 12 4/86 5/77 29,16 3,09
ஸ்டீபன் பின் 3 5 90,4 287 11 4/42 6/91 26,09 3,16
டனி பீடிட் 3 6 126,0 455 10 5/153 6/216 45,50 3,61
மொயின் அலி 4 6 161,0 485 10 4/69 7/116 48,50 3,01
(போட்டி, இன்னிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், இன்னிங்ஸ் சிறந்த பந்துவீச்சு, போட்டியின் சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓட்ட சராசரி வேகம் )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
49 minute ago
53 minute ago
58 minute ago