2025 ஏப்ரல் 26, சனிக்கிழமை

இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் மீண்டும் ஆரம்பம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 30 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியா ராணுவத்திற்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகளிற்கும் மோதல். தமிழ்ப் படங்களில் பார்த்த, பார்கின்ற விடயங்கள் இது. கிரிக்கெட் போட்டிகளிற்கு இந்த இரண்டு நாடுகளுக்குமிடையில் நடைபெறாமல் இருக்கவே இதுதான் மிகப் பெரிய அரசியல் பிரச்சினையாக உள்ளது. மீண்டும் ஒரு தடவை இரு அணிகளுக்குமிடையில் கிரிக்கெட் போட்டி தொடர் ஆரம்பமாகிறது. இது உண்மையில் போட்டித் தொடர் என சொல்ல முடியாது. யுத்தம் என்றுதான் சொல்ல முடியும். இரு நாடுகளுமே அப்படிதான் இந்த தொடரை பார்கின்றன. இரு நாடுகள் மாடுமன்றி உலகமே இந்த தொடரை அப்படித்தானே பார்கின்றன.

இந்த இரண்டு நாடுகள் மோதும் போட்டிகளே உலகிலேயே அதிகம் விறுவிறுப்பான போட்டிகளாகவும், அதிகமானவர்கள் பார்க்கின்ற போட்டிகளாகவும் இருக்கின்றன என்பது எல்லோரும் அறிந்ததே. பாகிஸ்தான் அணி இந்தியா சென்றுள்ளது. இரண்டு 20 -20 போட்டிகளையும், 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ஏற்பாடு செய்துள்ளது. டெஸ்ட் போட்டிகளை ஏற்பாடு செய்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையோ அதிக பணம் முயற்சியில்தான் ஈடுபடும். அப்போதுதான் அதிகமானவர்கள் பார்ப்பார்கள். அனுசரணையாளர்கள் அதிக பணம் கொடுப்பார்கள். பார்வையாளர்கள் அதிகம் வருவார்கள். பணம் நிறைய கிடைக்கும் என்பதே டெஸ்ட் போட்டிகள் அதிகம் ஏற்ப்பாடு செய்ய விரும்பாமைக்கு காரணம் என யூகிக்க முடியும். அண்மையில் மிக மோசமாக இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றும் கூட பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. இது ஒருநாள்ப் போட்டிகளில் நடந்தால் என்ன செய்வார்கள்? இப்படியேதான் இருந்து இருப்பார்களா? 

பாகிஸ்தான் அணி முதற் தடவையாக செப்டெம்பெர் மாதம் 10ஆம் திகதி 1983ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டியில் மோதியது. இறுதியாக கடந்த வருட உலகக்கிண்ண போட்டி தொடரின் அரை இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மோதியிருந்தன இந்தியாவில் வைத்து. இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் 1952ஆம் ஆண்டு இந்தியாவில் விளையாட ஆரம்பித்துவிட்டன. இரு அணிகளும் மாத்திரம் விளையாடிய நான்கு தொடர்கள் மாத்திரமே நடைபெற்றுள்ளன.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் 75ஆவது ஆண்டு பூர்த்தி விழா போட்டி 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த ஐந்து தொடர்களிலும் 3 தொடர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. முதல் தொடரில் இந்திய அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அடுத்த தொடர் 86ஆம் ஆண்டு நடைபெற்றது. பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 6 போட்டிகளில் 5 போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றியது. மீண்டும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் பாகிஸ்தான் அணி ஆதிக்கம் செலுத்தி தொடரைக் கைப்பற்றியது. 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி. 2007ஆம் ஆண்டு இந்தியா தொடரைக் கைப்பற்றியது. 5 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றுக் கொண்டது. ஆக, இரு அணிகளும் மோதிய தொடர்களில் பாகிஸ்தான் அணி மிக அபாரமாக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இம்முறை அது தொடருமா? இந்திய அணி சாதித்து காட்டுமா? டோனியின் தலைமைப் பொறுப்பு தூக்கப்படுவதும், காப்பாற்றப்படுவதும் இந்த தொடரிலேயே தங்கியுள்ளது. இந்திய அணியின் சில வீரர்களின் இடமும் கூடவே.

இரு அணிகளும் மோதிய தொடர்களில் 20 போட்டிகளில் 12இல் பாகிஸ்தான் அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்திய அணிக்கு 8 போட்டிகளில் வெற்றி கிடைத்துள்ளது. மொத்தமாக இரு அணிகளும் 27 போட்டிகளில் இந்திய மண்ணில் மோதியுள்ளன. இதில் 17 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி வெற்றி பெற்றது 10 போட்டிகள் மட்டுமே. ஆக மொத்தத்தில் இந்தியாவில் வைத்து பாகிஸ்தான் அணியே மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்தியுள்ளது. கிரிக்கெட்டிலும் இரு அணிகளுக்குமிடையிலான போட்டிகளில் பாகிஸ்தான் அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 121 ஒருநாள் சர்வதேச ஒருநாள்ப் போட்டிகளில் இரு அணிகளும் மோதியுள்ளன. இதில் 48 போட்டிகளில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணி 69 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கைவிடப்பட்ட போட்டிகள் 4. 

சாதனைகள் பெறுதிகள் கடந்த காலங்களை ஞாபகப்படுத்த, சாதனைகளை காட்ட முக்கியமானவையாக இருக்கும். அணிகள் தற்போது எப்பிடி இருக்கின்றன? என்ன செய்யப்போகின்றன என்பதே போட்டிகளிற்கு முக்கியமானவையாகும்.


இந்திய ஒருநாள் அணி பலமாக உள்ளது. சமநிலை அணி. அணியில் சச்சின் இல்லை என்பது பாகிஸ்தான் அணிக்கு மனவளவில் தெம்பைக் கொடுக்கும். இந்திய அணிக்கு மிகப் பெரியளவில் பிரச்சினை என்று சொல்ல முடியாது. உலகக் கிண்ணத்திற்கு பின் சச்சின் இல்லாமல் அவர்கள் விளையாடிப்பழகிவிட்டார்கள். சகீர் கானும் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆக அடுத்த எதிர்கால இந்திய அணி களமிறங்கப்போகிறது என்றே சொல்ல முடியும். துடுப்பாட்ட வீரர்கள் இந்திய அணியில் இவர்கள்தான் எனும் அளவிற்கு சிறப்பாக இடம்பிடித்துள்ள போதும் பந்து வீச்சாளர்களில் அஷ்வின் தவிர மற்றவர்கள் நிரந்தரமற்றவர்களாகவே காணப்படுகின்றனர். இந்த தொடருக்கு இரு புதிய வேகப் பந்துவீச்சாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதில் புவேனேஸ்வர் குமார் சகலதுறை வீரர். இந்தியாவின் நீண்ட நாள் சகலதுறை வீரர் பிரச்சினைக்கு இவராவது தீர்வாக அமைவாரா? உபாதையில் இருந்து மீண்டு அணிக்குள் இர்பான் பதானும் இடம் பிடித்தால் இந்திய அணி நல்ல துடுப்பாட்ட வரிசையைக் கொண்டதாக அமையும். மனோஜ் திவாரி நல்ல முறையில் அணிக்குள் இடம்பிடிக்க ஏற்பட்ட உபாதை அணியால் வெளியேற்றியுள்ளது. அவருக்காக ரவீந்தர் ஜடேஜா அணிக்குள் வந்துள்ளார். துடுப்பாட்டம் பிரச்சினை என்று சொல்ல கூடியதாக இருந்தாலும் அண்மைக்காலமாக இந்திய அணி சொதப்பி வருவது துடுப்பாட்டத்தில்தான்.

வேகப் பந்துவீச்சு மூன்று புதியவர்களுக்கு என நிச்சயம் சொல்லலாம். இஷாந்த் ஷர்மாவும் அந்த வரிசையில் அடங்குவார் என்றே சொல்லலாம். அவர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அசோக் டின்டா நீண்டா நாட்கள் கார்த்து இப்போது வாய்ப்புகள் ஓரளவு கிடைத்து வருகின்றது. ருவென்டி ருவென்டி போட்டியில் விக்கெட்களைக் கைப்பற்றியது இவருக்கு நம்பிக்கை வழங்கும். முதல் ருவென்டி ருவென்டி போட்டியில் புவனேஸ்வர் குமார் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி எதிர் பார்ப்பை உருவாக்கியுள்ளார். ஏழாம் இடம் ஜடேஜா, ரோஹித் ஷர்மா ஆகியோருக்கிடையில் உள்ளது. பந்து வீச்சு ஜடேஜாவிற்கு அதிக வாய்ப்பை தரும். முதல் ஆறு இடங்களில் எந்த சந்தேகமும் இல்லை. விரேந்தர் செவாக், கெளதம் கம்பீர், விராத் கோலி, யுவராஜ் சிங், டோனி, சுரேஷ் ரெய்னா.

இந்திய அணி விபரம்
விரேந்தர் செவாக், கெளதம் கம்பீர், விராத் கோலி, யுவராஜ் சிங், டோனி, சுரேஷ் ரெய்னா, இஷாந்த் ஷர்மா, ரோஹித் ஷர்மா, ரவீந்தர் ஜடேஜா, புவேனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், அஜிங்கயா ரெஹானே, அசோக் டின்டா, ஷமி அஹமட், அமித் மிஸ்ரா.

பாகிஸ்தான் அணி புதிதாக உருவாகி வரும் அணி. இளைய வயது வீர்கள் தங்கள் இடங்களை சரியாக பிடித்து வருகின்றனர். சஹிட் அப்ரிடி அணியால் நீகப்பட்டுள்ளார். சுழல்ப் பந்துவீச்சில் சைட் அஜ்மல், மொஹம்மட் ஹபீஸ் ஆகியோர் சிறப்பாக இருப்பதன் காரணமாக துடுப்பாட்டத்தில் முழுமையாக சொதப்பி வரும் அப்ரிடிக்கு இடம் இல்லை. அவர் தேவை இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மேலதிக துடுப்பாட்ட வீரர் ஒருவரை சேர்த்துக்கொள்ளலாம். துடுப்பாட்ட வீரராக அணிக்குள் வந்த அவரின் இடம் பெரிய அளவில் கேள்விக்குறியாகியுள்ளது. மொஹம்மட் ஹபீஸ், நசீர் ஜெம்ஷெட் ஆகியோர் அபாரமான ஆரம்பத்தை வழங்கி வருகின்றனர். ஆசர் அலி மூன்றாமிலக்கதில் வருகிறார். அந்த இடத்தில் அவர் மிகப் பலமானவர். நான்காமிடம் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக். அடுத்த இடம் யூனுஸ் கானுக்கு கிடைக்கலாம். அண்மைக்காலமாக அணியில் இல்லாமல் இருந்து அணிக்குள் மீள வந்துள்ளார். எனவே இன்னும் செய்து காட்ட வேண்டும். உமர் அக்மல், கம்ரன் அக்மல் ஆகியோர் அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள். சொஹைப் மலிக் பந்து வீச்சாளர்களுடன் போராட வேண்டி இருக்கும் அணியில் இடம் பிடிக்க. அவரும் அணியில் இடம் பிடித்தால் பாகிஸ்தான் அணி பலமான துடுப்பாட்ட வரிசையை கொண்டதாக இருக்கும். பந்துவீச்சில் சைட் அஜ்மல், உமர் குள் ஆகியோர் நிச்சயம் விளையாடுவார்கள். அடுத்த இடம் ஜுனைட் கானிற்கு கிடைக்கும். மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்படும் நிலையில் வஹாப் ரியாஸ் அணிக்குள் வருவார் என நம்பலாம். மூன்று போட்டிகள் என்ற காரணத்தினால் அணிக்குள் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.

கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
சல்மான் பட்                      12     12     595    129        54.09       82.66    3    1
இன்சமாம் உல் ஹக்     12     12     551      91        68.87       86.49    0    5
சச்சின் டெண்டுல்கர்      15    15      540    123        36.00       85.71    1    3
மொஹமட் யூசுப்            14    14      517      99*      43.08       88.07    0    5
சொய்ப் மலிக்                    12    12     489       89       40.75       86.09    0    5
M.S டோனி                          12     12     471    148       42.81       88.96    1    1
ராகுல் ட்ராவிட்                 11     11     459    107        41.72      78.59    2    2
யுவராஜ் சிங்                       13    13     448       78       40.72       86.31    0    5
சஹிட் அப்ரிடி                   16    15     427    102       30.50    134.70    1    1
விரேந்தர் செவாக்            12     12     409    108       34.08    103.28    1    2
சைட் அன்வர்                       5      5      350    194       70.00    113.63    1    1   
ஜாவிட் மியன்டார்ட்       10    10      347      78*     43.37       70.24    0    3
இஜாஸ் அஹமட்              9      9      324      89*     40.50       69.97    0    2
யூனுஸ் கான்                    10    10      324    117       32.40       82.02    1    1
சலீம் மலிக்                        10      9      305       84      38.12       92.42    0    2

கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
நவீட் உல் ஹசன் ரானா     7      7       59.4    313    16    27/6    19.56    5.24   
ஆசிஸ் நெஹ்ரா                    7      7      65.0    396    15    72/4    26.40    6.09   
சொய்ப் அக்தர்                        8      8       70.0    289    14    42/3    20.64    4.12   
சகீர் கான்                               12     12    106.4    563    14    25/2    40.21    5.27
அர்சாட் கான்                          6       6      43.0    194    12    33/4    16.16    4.51   
கபில் தேவ்                               8      8      74.5    337    12    32/2    28.08    4.50
வசீம் அகரம்                         10    10      88.3    388    12    26/3    32.33    4.38
சச்சின் டெண்டுல்கர்         15    12      57.0    354    11    50/5    32.18    6.21
அனில் கும்ப்ளே                   5       5      49.0    269    10    53/4    26.90    5.48

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .