2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

புட்சால் காற்பந்து விளையாட்டும் உலகக்கிண்ணமும்

A.P.Mathan   / 2012 நவம்பர் 28 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


புட்சால் என்பது காற்பந்தாட்டமே. கிரிக்கெட்டில் எவ்வாறு 20 - 20 போட்டிகள் சிறிய குறைக்கப்பட்ட வடிவில் உள்ளதோ அதேபோன்றதே இந்த புட்சால் காற்பந்தாட்டம். ஓர் அணியில் ஐந்து வீரர்கள் விளையாடுவர். பொதுவாக உள்ளக அரங்கில் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதற்கான தனி ஆடுகள அமைப்பு இருக்கின்றது. இலங்கையில் போதிய வசதிகள் இல்லாமையினால் சாதாரண புற்தரை மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டியின் மொத்த நேரம் 55 நிமிடங்கள். இது அதி கூடிய நேரம். ஒரு பாதி 20 நிமிடம் என்ற அடிப்படையில் இரு பாதிகள் விளையாடும் நேரமாக இருக்கும். இடைவேளை 15 நிமிடங்கள். பந்து வழமையான பந்திலும் பார்க்க சிறியதாக இருக்கும். சில விதிமுறைகள் சாதாரண காற்பந்தாட்ட போட்டியிலும் பார்க்க வேறுபட்டதாக அமையும். கோல் கம்பமும் சிறிதாகவே காணப்படும். ஆடுகள நீளம் 38 - 42 மீற்றர் நீளம், 20 - 25 மீற்றர் அகலமாகவும் காணப்படும். இந்த விளையாட்டு 1932ஆம் ஆண்டு உருகுவே நாட்டில் முதல் முதல் விளையாடப்பட்டுள்ளது. 1989ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு நான்கு வருடங்களும் உலக்கக்கிண்ணமாக இந்த தொடர் நடைபெற்று வருகின்றது.   

இந்த போட்டியில் உதிரி வீரர்கள் 9 பேர் இருக்க முடியும் ஆக்கக் கூடுதலாக. வழமையான காற்பந்துபோல் அல்லாமல் இந்த விளையாட்டில் எத்தனை தடவை என்றாலும் வீரர்களை மாற்ற முடியும். பந்தினை வேகமாக மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் ஒரு விதிமுறையாக இந்த விளையாட்டில் உள்ளது. சாதாரண காற்பந்தே வேகமான விளையாட்டு. அதைவிட இது வேகமான விளையாட்டு. எந்த அளவிற்கு வேகம் இருக்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

இந்த விளையாட்டின் உலகக் கிண்ணம் இம்முறை தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்றது. நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 18ஆம் திகதி வரை இந்த போட்டி தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் பிரேசில் அணி இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி சம்பியன் ஆகியது. விளையாடிய 7 போட்டிகளிலுமே பிரேசில் அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 8 குழுக்களாக, 32 அணிகள் பிரிக்கப்பட்டு குழு நிலைப் போட்டிகள் நடைபெற்றன. அதில் இருந்து 16 அணிகள் இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகின. இரண்டாம் சுற்றில் இருந்து போட்டிகள் தோற்றால் வெளியேறும் முறையில் (நொக் அவுட்) நடைபெற்றன. காலிறுதிப் போட்டிகளில் போர்த்துக்கல், இத்தாலி ஆகிய அணிகள் மோதின. இத்தாலி வெற்றி பெற்றது. அடுத்த காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி, ரஷ்யா அணியை வெற்றி பெற்றது. இன்னுமொரு காலிறுதிப் போட்டியில் பிரேசில் அணி மிகப் பெரிய போராட்டத்துக்கு பின் மேலதிக நேரத்தில் ஆர்ஜன்டீனா அணியை வெற்றி கொண்டது. கொலம்பிய, உக்ரைன் அணிகளுக்கிடையிலான போட்டியில் கொலம்பியா அணி வெற்றி பெற்றது.


அரை இறுதிப் போட்டிகளில் பிரேசில் அணியானது கொலம்பியா அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவானது. மறுபுறம் ஸ்பெயின் அணியானது இத்தாலி அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் வந்தது. மூன்றாமிட போட்டியில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலதிக நேரத்தில் 3:2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்களைப் பெற, போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. மேலதிக நேரப் பகுதியில் பிரேசில் அணி மேலும் ஒரு கோலைப் பெற, இந்த தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் ஆகியது.


இதுவரையில் நடைபெற்ற புட்சால் உலக்கிண்ண போட்டிகளில் பிரேசில் அணி இம் முறையுடன் சேர்த்து 6 தடவைகள் சாம்பியன் ஆகியுள்ளது. மற்றைய இரு தடவைகளும் ஸ்பெயின் அணி சம்பியன் ஆகியுள்ளது. காற்ப்பந்து போட்டிகள் போலவே பிரேசில் அணி இந்த போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறது.  

முதல் சுற்றுப் போட்டிகளின் புள்ளி நிலைவரங்கள்

குழு A
உக்ரைன்                     3    2    1    0    14      7    7
பரகுவே                       3    1    1    1      9    11    4
தாய்லாந்த்                 3    1    0     2     8       9    3
கொஸ்டா ரிக்கா     3    1    0     2     8     12    3

குழு B
ஸ்பெயின்             3    2    1    0    15      6    7
ஈரான்                      3    2    1    0       8      6    7
பனாமா                   3    1    0    2    14    15    3
மொரோகோ        3    2    1    0       8      6    7

குழு C
பிரேசில்                 3    3    0    0    20      2    9
போர்த்துக்கல்     3    1    1    1    11      9    4
ஜப்பான்                 3    1    1    1    10    11    4
லிபியா                  3    0    0    3       3    22    0

குழு D
இத்தாலி                       3    3    0    0    17      5    9
அர்ஜென்டீனா            3    2    0    1    14      5    6
அவுஸ்திரேலியா     3    1    0    2      5    17    3
மெக்ஸிகோ                3    0    0    3      4    13    0

குழு E
சேர்பியா               3    2    1    0    12      5    7
செக் குடியரசு      3    1    1    1      7    11    4
எகிப்து                    3    1    0    2    11      9    3
குவைத்                  3    1    0    2      8    13    3

குழு F
ரஷ்யா                                         3    3    0    0    27      0    9
கொலம்பியா                            3    1    0    2    13    10    3
கோதமாலா                               3    1    0    2      8    15    3
சொலொமன் ஐலன்ட்ஸ்     3    1    0    2      7    30    3

இரண்டாவது சுற்று போட்டிகளில் 16 அணிகள் பங்குபற்றின. 16 அணிகளில் இருந்து 8 அணிகள் அடுத்த சுற்றான காலிறுதி சுற்றுக்கு தெரிவாகின.

இரண்டாம் சுற்று முடிவுகள்
போர்த்துக்கல் எதிர் பராகுவே : 4 - 1
அர்ஜென்டீனா எதிர் செர்பியா : 2 - 1
இத்தாலி எதிர் எகிப்து : 5- 1
பிரேசில் எதிர் பனாமா : 16 - 0
ஸ்பெயின் எதிர் தாய்லாந்து : 7 - 1
ஈரான் எதிர் கொலம்பியா : 2 - 1
ரஷ்சியா எதிர் செக் குடியரசு : 3 - 0
யுக்ரைன் எதிர் ஜப்பான் : 6 - 3


விறுவிறுப்பான போட்டி தொடராக இந்த தொடர் நிறைவடைந்து இருந்தது. இந்த இறுதிப் போட்டியை நேரடியாக பார்த்தவர்கள் 5685 பேர் மட்டுமே. உள்ளக அரங்கு அல்லது மைதானங்களில் இந்த போட்டிகள் அதிகம் நடைபெறுகின்றன. அதன் காரணமாகவே பார்வையாளர்களின் எண்ணிக்கை இந்த போட்டிகளுக்கு இவ்வாறு இருக்கின்றன. இது அரங்கு நிறைந்த போட்டியாக இருந்தது.

இந்த புட்சால் போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுகின்றன. இலங்கையில், இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் காற்பந்து போட்டிகளை வளர்க்க எவ்வளவு அக்கறையுடன் செயற்படுகிறார்களோ அதேயளவு அக்கறை இதன் மீதும் கொண்டுள்ளார்கள். ஆனால் காற்பந்தை இலங்கையில் வளர்க்க எவ்வளவு கஷ்டமாக உள்ளதோ அதே நிலைதான் இந்த புட்சாளிற்கும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .