2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன்ஸ் லீக்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக் போட்டித் தொடர் தென் ஆபிரிக்காவில் நிறைவுக்கு வந்துள்ளது. மிகுந்த பரபரப்பு, விறு விறுப்பு இந்த தொடருக்கு இருந்தது என்று சொல்வதற்கில்லை. உலக 20 - 20 முடிவடைந்து சிறிது நாட்களுக்குள்ளேயே இந்த தொடர் ஆரம்பித்தமை ஒரு முக்கிய காரணம். சொந்த நாடு அணிகளின் வெற்றி தோல்விகள், சந்தோசங்கள், வெறுப்புக்கள் என மன ரீதியான விடயங்கள் அடங்க முன்னரே இன்னும் ஒரு தொடர். யாருக்கு ஆதரவு தருவது என்ற குழப்ப நிலை. எதிர்த்த வீரர்கள் சார்பான அணியிலும், ஆதரவு தெரிவித்த வீரர் எதிர்த்தும் விளையாட உடனடியாக மனதை மாற்றிக்கொள்ள மனம் இடம் கொடுக்குமா என்பதும் கேள்வியே. இவற்றை தாண்டி ஆரம்ப கட்டுரையில் குறிப்பிட்டது போலவே 20 - 20 போட்டிகளை பார்த்து ரசிகர்கள் களைப்படைந்துள்ளனர் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையே.  


IPL போட்டிகளைப் பொறுத்தளவில் அணிகள், வீரர்கள் பழக்கப்பட்டுவிட்டனர். சம்பியன் லீக் போட்டிகளில் இதே குழப்பம் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. அணிகள் எவை? வீரர்கள் யார்? என்பன தெரியாத நிலைமை என்றுதான் சொல்ல முடிகிறது. இப்படியான தருணத்தில் போட்டிகள் தென் ஆபிரிக்காவில் நடைபெற்றன. நேர வித்தியாசம் என்று சொல்லும் அளவிற்கில்லை. போட்டிகள் விறு விறுப்பாக அமையாமலும் இல்லை. ஆனால் போட்டிகளை பார்த்தவர்கள் குறைவு. 

இந்தப் போட்டி தொடர் கடந்த 09ஆம் திகதி தெரிவுகான் போட்டிகளுடன் ஆரம்பமாகி இருந்தன. இதில் இரண்டு அணிகள் (ஒக்லாந்து, யோர்க்க்ஷெயார்) தெரிவாகி இறுதித் தொடரில் மொத்தமாக 10 அணிகள் மோதின. இதில் அவுஸ்திரேலியா சார்ந்த சிட்னி சிக்சர்ஸ் அணி சம்பியன் ஆகியுள்ளது.

இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு குழுவிலும் ஐந்து அணிகள் மோதி அவற்றில் கூடுதலான புள்ளிகளைப் பெற்ற இரு அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகின.

குழு A
டெல்லி டெயார்டெவில்ஸ்          4    2    0    0    2    12    +1.440
டைடன்ஸ்                                            4    2    1    0    1    10    -0.017
கொல்கொத்தா நைட்ரைடர்ஸ்    4    1    2    0    1      6    +.488
பேர்த் ஸ்கொச்செர்ஸ்                     4    1     2    0    1      6    -0.474
ஒக்லாந்து                                              4    1     2    0    1      6    -0.963

குழு B
சிட்னி சிக்சர்ஸ்                       4    4    0    0    0    16    +1.656
லயன்ஸ்                                     4    3    1    0    0    12    +0.140
சென்னை சுப்பர் கிங்க்ஸ்    4    2    2    0    0    08    -0.049
மும்பை இந்தியன்ஸ்           4    0    3    1    2    02    -0.471
யோர்க்க்ஷெயார்                     4    0    3    0    1    02    -1.791   

(போட்டிகள், வெற்றி, தோல்வி, சமநிலை, கைவிடப்பட்ட போட்டி, புள்ளிகள், ஓட்ட நிகர சராசரி வேகம்)

அரை இறுதிப் போட்டிகள்
குழு நிலைகள் இவ்வாறு அமைய குழு A இல் இருந்து டெல்லி டெயார்டெவில்ஸ் அணி முதலாமிடத்தை பெற்று குழு B இல் இரண்டாமிடத்தைப் பெற்ற லயன்ஸ் அணியுடன் ஓர் அரை இறுதிப் போட்டியில் மோதியது. குழு B இல் முதலாமிடம் பெற்ற சிட்னி சிக்சர்ஸ் அணி குழு A இல் இரண்டாமிடம் பெற்ற டைடன்ஸ் அணியுடன் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மோதியது. 

முதல் அரை இறுதிப் போட்டியில் லயன்ஸ் அணி முதலில் துடுபெடுத்தாடி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. குலாம் போடி 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். நீல் மக்கன்சி ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அல்விரோ பீற்றர்சன் 24 ஓட்டங்கள். பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 20 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி டெயார்டெவில்ஸ் அணி கெவின் பீற்றர்சனின் அரைச் சதம் மூலமாக 100 ஓட்டங்களைத் தாண்டியது. 50 ஓட்டங்கள் கெவின் பீற்றர்சன். டேவிட் வோர்னர் 21 ஓட்டங்கள். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 117 ஓட்டங்களைப் பெற்று 22 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது. லயன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டி சிட்னி சிகசர்ஸ், டைடன்ஸ் அணிகளுக்கிடையில் மிக நெருக்கமாக நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் அணி இறுதிப் பந்தில் 8 விக்கெட்களை இழந்து வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிய டைடன்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இதில் ஹென்றி டேவிட்ஸ் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களையும், டேவிட் வைஸ் ஆட்டமிழகாமல் 61 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மிச்சேல் ஸ்டார்க் 2 விக்கெட்கள். பதிலளித்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மிக்கேல் லம்ப் 33 ஓட்டங்களையும். ஸ்டீவ் ஓ கொபி 32 ஓட்டங்களையும் பெற்றனர். எல்லோருடைய சராசரியான ஓட்டங்களும் வெற்றி இலக்கை தொட உதவியாக இருந்தது. பந்து வீச்சில் அல்போன்சா தோமஸ் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 

இறுதிப் போட்டி
இறுதிப் போட்டி சிட்னி சிக்சர்ஸ், லயன்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய லயன்ஸ் அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. ஜீன் சைமஸ் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். மற்றைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களிற்குள் ஆட்டமிழந்தனர். ஆரம்ப விக்கெட்ட்கள் மிக வேகமாக வீழ்த்தப்பட லயன்ஸ் அணி குறைந்த ஓட்டகளிற்குள் தனது இன்னிங்ஸை நிறைவு செய்தது. பந்து வீச்சில் நேதன் மக்கலம், ஜோஷ் ஹஸல்வூட் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றிக் கொண்டனர். பதிலளித்த சிட்னி சிக்சர்ஸ் அணி விக்கெட் இழப்புக்கள் இன்றி மிக இலகுவாக வெற்றி பெற்றது. 12.3 ஓவர்கள் மாத்திரமே அவர்களுக்கு இந்த இலக்கைப் பெற தேவைப்பட்டது.  மிக்கேல் லம்ப் 82 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 42 பந்துகளில், 8 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக இந்த ஓட்ட எண்ணிகையை அவர் பெற்றுக் கொண்டார். பிரட் ஹட்டின் 37 ஓட்டங்கள்.

இறுதிப் போட்டியின் நாயகனாக மிக்கேல் லம்ப் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை போட்டி தொடர் நாயகனாக மிச்சேல் ஸ்டார்க் தெரிவு செய்யப்பட்டார்.


இந்த தொடரில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
மிக்கேல் லம்ப்                 6    6    226    82*    56.50    155.86        1
குலாம் போடி                   6    6    208    64      34.66    117.51        3
நீல் மக்கன்சி                     6    6    176    68*    44.00    130.37        1
ஜக்ஸ் ருடோல்ப்             5    4    172    83*    57.33    119.44        2
ஹென்றி டேவிட்ஸ்     5    4    162    59*     54.00    142.10        2
அசார் மஹ்மூட்              5    5    160    55*     53.33    126.98        2
கரி பலன்ஸ்                      6    5    147    64*     36.75    134.86        2
மார்டின் கப்டில்                5    5    142    40      28.40    110.07        0
ஜீன் சைமஸ்                     6    5    140    51      46.66    129.62        1
பிரட் ஹட்டின்                  6    6    133    41      26.60    133.00        0
தினேஷ் கார்த்திக்           4    4    123    74      41.00    153.75        1
பிஅப் டு ப்லேசிஸ்          4    4    121    52       30.25    147.56        1
சைமன் கட்டிச்                  4    4    121    43*    40.33    104.31        1

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி அரைச் சதங்கள், * - ஆட்டமிழப்பு இல்லை)

இந்த தொடரில் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
மிச்சேல் ஸ்டார்க்                       6    6    24.0    173    14    19/3    12.35    7.20
ஆஷர் மஹ்மூட்                         5    5       18    116    10    24/5    11.60    10.8
ஆரோன் ப்ஹங்கிசோ              6    6    22.0      18    10    14/3    11.80    5.36
லசித் மாலிங்க                             4    3    11.5      86    08    32/5      7.26    8.80
மொய்செஸ் ஹென்றிகஸ்    6    5    16.0    116    08    23/3    14.5      7.25
மிக்கேல் பேட்ஸ்                         5    5    18.0    132    08    34/4    16.50    7.33
ஜோஷ் ஹஸல்வூட்                 6    6    24.0    113    07    22/3    16.14    4.70
ஸ்டீபான் பட்டேர்சன்                6    6    19.2    132    07    21/2    18.85    6.82
லக்ஸ்மிபதி பாலாஜி                 4    4    15.0    135    07    19/4    19.28    9.00

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு, சராசரி, ஓவருக்கான சராசரி ஓட்டங்கள்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .