2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

சம்பியன் லீக் போட்டிகள்

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 12 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


ருவென்டி, ருவென்டி போட்டிகள் பார்த்து அலுத்துப் போயுள்ள நிலையில் மீண்டும் ஒரு தொடர். ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள், அல்லது டெஸ்ட் போட்டிகள் பார்க்கக் கிடைக்காதா? பொறுமையான மெதுவான கிரிக்கெட் போட்டிகள் பார்த்தா நன்றாக இருக்குமே என்ற நிலையில் சம்பியன் லீக் போட்டிகள் தென் ஆபிரிக்காவில் ஆரம்பமாகின்றன. IPL போட்டிகளின் ஒரு தொடர்ச்சியாக நடத்தப்படுகின்ற ஒரு தொடர் என்று சொல்லலாம். சர்வதேசக கழக அணிகள் மோதும் தொடர் இது. 2009ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இம்முறையும் மோதுகின்றன. 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மற்றைய இரண்டு அணிகள் 6 அணிகளுக்கிடையில் நடைபெற்ற தெரிவுப்போட்டிகளில் இருந்து தெரிவாகியுள்ளன. இப்படி 10 அணிகள் மோதுகின்றன. இரு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டு தமக்குள்ள மோதும். அவற்றில் இருந்து முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டியில் மோதி பின்னர் இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். இதுவே இந்த தொடரின் போட்டி அமைப்பு.

தெரிவுகாண் போட்டிகள் மூன்று நாட்களில் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் இறுதி தொடர் இம்மாதம் 13ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன. 23 போட்டிகள் மொத்தம் நடைபெறவுள்ளன. இந்தியாவில் இருந்து நான்கு அணிகள் பங்கு பற்றுகின்றன. இரு குழுக்களிலும் இரு அணிகள் இடம்பிடித்துள்ளன. குழு Aஇல் டெல்லிடெயாடெவில்ஸ், கொல்கொத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் இடம்பிடித்துள்ளன. குழு Bஇல் சென்னை சுப்பர் கிங்க்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. தென் ஆபிரிக்க அணிகளான ரைரன்ஸ், ஹைவெல்ட் லயன்ஸ் அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. இதில் ரைரன்ஸ் அணி குழு A இலும், ஹைவெல்ட் லயன்ஸ் அணி குழு Bஇலும் பங்கு பற்றுகின்றன. அவுஸ்திரேலியா சார்பாக பேர்த் ஸ்க்கொச்சேர்ஸ் அணி குழு A இலும், சிட்னி சிக்செர்ஸ் அணி குழு B இலும் பாம்கு பற்றுகின்றன. நியூசிலாந்தின் ஒக்லண்ட் ஆஷஸ் அணி குழு A இலும், இங்கிலாந்தின் யோர்க்க்ஷெயர் அணி குழு B இலும் இடம் பிடித்துள்ளன.

இந்த போட்டிகள் பற்றிய எதிர்வு கூறல்களை சொல்வது கஷ்டம். IPL போட்டிகள் காரணமாக இந்தியாவின் நான்கு அணிகள் பற்றி இலங்கை ரசிகர்களுக்கு அதிகம் தெரியும். மற்ற அணிகள் பற்றி அந்த நாட்டு ரசிகர்களுக்கு தெரியும். ஆனாலும் இந்தியாவின் அணிகளில் தான் அதிகம் வெளிநாட்டு வீரர்கள் பங்கு பற்றுகின்றார்கள். பலமான அணிகளாகவும் தென்படுகின்றன. மற்றைய நாட்டு அணிகளில் ஓரிரு வெளிநாட்டு வீரர்கள் மாத்திரமே விளையாடுகின்றார்கள். கடந்த இரு வருடங்களும் இந்தியாவின் அணிகளே சம்பியன் ஆகின. முதல் சம்பியன் லீக்கில் 2009ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணியான நியூ சவுத் வேல்ஸ் அணி சம்பியன் ஆனது இந்தியாவில் வைத்து. 2010ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் வைத்து சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியும், கடந்த முறை இந்தியாவில் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணியும் சம்பியன் ஆகின. பொதுவான துடுப்பாட்ட பெறுதிகள், பந்து வீச்சு பெறுதிகளைப் பார்க்கும் போதும் இந்தியாவின் அணிகளே அதிகம் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கு பற்றுவதும் அவர்களுக்கு அணி புரிந்துணர்வையும், அனுபவத்தையும் வழங்கியுள்ளன. அதன் அடிப்படையில் அவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் என்று சொல்ல முடிகிறது. ஆனால் ஆடுகளங்கள் நிச்சயம் மற்ற அணிகளுக்கு குறிப்பாக தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கு சாதக தன்மையை வழங்கும் என்று எதிர்பார்த்தாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகம் வழங்கக் கூடிய தட்டையான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு விட்டால் இந்த சாதக தன்மை எல்லாம் மாறிப் போய்விடும். மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா என்று சொல்ல முடியும். சர்வதேசக் கிரிக்கெட் சபை ஒழுங்கு படுத்தல்களை இப்படி இடங்களில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியும். இலங்கையில் நடை பெற்ற ICC வேர்ல்ட் T20 போட்டி தொடரில் எத்தனை சொதப்பல்கள் என்பது சாதாரண ரசிகருக்கு கூடத் தெரியும். IPL போட்டிகளும் சரி, சம்பியன் லீக் போட்டிகளும் சரி அதிகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற நல்ல பொழுதுபோக்காக போட்டிகள் அமைந்தும் விடுகின்றன. ஒழுங்கு படுத்தல்கள் கூட சிறப்பாகவே இருந்து வருகின்றன. இந்த அடிப்படையில் பலர் இதை ரசித்தாலும் வெறுப்பவர்கள் இல்லாமல் இல்லை. 20 - 20 போட்டிகள் என்றாலே வெறுப்பவர்கள் ஒரு பக்கம். பணம் புகுந்து விளையாடுகிறது. கிரிக்கெட்டின் கனவான் தன்மை சிதைந்து போகிறது என மறு பக்கம். நிறைய ஊழல்கள். பந்தயம் என சிக்கல்கள் நிறைந்து போய்விடுகின்றன. இவற்றிக்காவே வெறுப்பவர்கள் அதிகம். இன்னும் ஒரு பக்கம் வீர்கள் தங்கள் சொந்த நாட்டு அணி, அல்லது சொந்த அணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மற்ற அணிகளில் விளையாடுவதனால் எரிச்சல் படுபவர்கள் இன்னும் ஒரு பக்கம் என எதிர்ப்புக்கள் இல்லாமல் இல்லை.

பொழுது போக்கு, விறு விறுப்பு, சுவாரசியம் என இந்த எதிர்மறையான விடயங்களும் மறக்கடிப்பட்டும் விடுகின்றன. ஆரம்பிக்கும் கிரிக்கெட் திருவிழா கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம்.


குழு நிலைவரங்கள்

குழு A
1.    டெல்லிடெயாடெவில்ஸ்
2.    கொல்கொத்தா நைட்ரைடர்ஸ்
3.    ரைரன்ஸ்
4.    பேர்த் ஸ்க்கொச்சேர்ஸ்
5.    ஒக்லண்ட் ஆஷஸ்

குழு B
1.    சென்னை சுப்பர் கிங்க்ஸ்
2.    மும்பை இந்தியன்ஸ்
3.    ஹைவெல்ட் லயன்ஸ்
4.    சிட்னி சிக்செர்ஸ்
5.    யோர்க்க்ஷெயர்

அணி விபரம்

ரைரன்ஸ் வன்
ஜார்ஸ்வெல்ட், பார்ஹன் பெஹர்டீன், ஹென்றி டேவிஸ், வில்லியர்ஸ், கோர்ன்லியர்ஸ் டி வில்லியர்ஸ், போல் ஹரிஸ், ஹெய்னோ கூன், ஏடன் லிங்ஸ், எத்தி மலாடி, மங்கலிசோ மொச்சல், ரொவான் ரிச்சர்ட்ஸ், ஜக்ஸ் ருடொல்ப், அல்போன்சோ தோமஸ், வன் டேர் மேவ், டேவிட் வைஸ்.

பேர்த் ஸ்க்கொச்சேர்ஸ்
மார்கஸ் நோர்த், ரொம் பீட்டோன், மிக்கேல் பீர், போல் கொலிங்வூட், நேதன் கோட்லர் நைல், ரயன் டபீல்ட், பென் எட்மொன்சன், ஹெர்சல் ஹிப்ஸ், பிரட் ஹொக், சைமன் கடிச், மிச்சேல் மார்ஸ், ஷோன் மார்ஸ், ஜோ மென்னி, நேதன் ரிமிங்க்டன், லூக் ரொஞ்சி

டெல்லிடெயாடெவில்ஸ்
கெளதம் கம்பீர், லக்சுமிபதி பாலாஜி, ராஜாத் பாத்தியா, மன்விந்தர் பிஸ்லா, டேபெப்ரத்ரா தாஸ், இக்பால் அப்துல்லா, ஜக்ஸ் கலிஸ், ப்ரெட் லீ, பிரென்டன் மக்லம், சுனில் நரையன், யூசுப் பதான், சமி அஹ்மத், சகிப் அல் ஹசன், ரயன் டென் டொஸ்காட்டி, மனோஜ் திவாரி

கொல்கொத்தா நைட்ரைடர்ஸ்
மஹேல ஜெயவர்தன, அஜித் அகர்கார், உண்முக்ட்சண்ட, மோர்னி மோர்க்கல், பவான் நேஜி, நாமன் ஓஜா, இர்பான் பதான், கெவின் பீட்டர்சன், அன்றே ரஸ்ஸல், ஆவிசக்கார் சல்வி, விரேந்தர் செவாக், ரொஸ் ரெய்லர், வேணுகோபால் ராவ், டேவிட் வோர்னர், உமேஷ் யாதவ் 

ஹைவெல்ட் லயன்ஸ்
டெம்பா பவுமா, குலாம் போடி, சண்டர் டி ப்ருய்ன், க்விண்டன் டி கொக், நீல் மக்கன்சி, புமெலேலா மட்சிக்கேவ், கிறிஸ் மொரிஸ், டேர்க் நனாஸ், எத்தான் ஒ ரெய்லீ, அல்விரோ பீற்றர்சன், ஆரோன் பன்கிசோ, டுவைன் பட்டோரியஸ், சொஹைல் தன்வீர், ஜீன் சிம்ஸ், தமி சொலகிலி

மும்பை இந்தியன்ஸ்
ஹர்பஜன் சிங்க், மிச்சல் ஜோன்சன், தினேஷ் கார்த்திக், தவல் குல்கர்னி, ரிச்சர்ட் லெவி, லசித் மாலிங்க, பிரக்ஜன் ஓஜா, முனாப் பட்டேல், திசர பெரேரா, கெரோன் போலர்ட், அம்பாத்தி ராயுடு, ரோஹித் ஷர்மா, டுவைன் ஸ்மித், சச்சின் ரெண்டுல்கார், சூர்யகுமார் யாதவ் 

சென்னை சுப்பர் கிங்க்ஸ்
மகேந்திரா சிங்க் டோனி, ரவிச்சந்திரன் அஷ்வின், சுப்பிரமணியம் பத்திரிநாத், டக் போலின்ஜர், பஅப் டு ப்லேசிஸ், பென் ஹில்பான்ஹோஸ், மைக்கல் ஹஸ்ஸி, ரவீந்தர் ஜடேஜா, சதாப் ஜகாத்தி, நுவான் குலசேகர, யோ மகேஷ், அல்பி மோர்க்கல், சுரேஷ் ரெய்னா, ரிதிமன் சஹா, முரளி விஜய்

சிட்னி சிக்செர்ஸ்
பிரட் ஹடின், பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹஸ்லிவூட், மோசஸ் ஹென்றிகஸ், மிக்கல் லம்ப், நேதன் மக்கலம், நிக் மடின்சன், இயன் மோறன், பீற்றர் நெவில், ஸ்டீவ் ஒ கோபி, பென் ரோரர், ஸ்டீபான் ஸ்மித், மிச்சேல் ஸ்டார்க், டொமினிக் த்ரோன்லி, ஷேன் வொட்சன் 

யோர்க்க்ஷெயர்
அன்று கேல், மொய்ன் அஸ்ரப், அசீம் ரபிக், கரி பலன்ஸ், ஒலிவர் ஹன்னன் டல்பி, டொன் ஹொக்சன், பில் ஜக்ஸ், அடம் லைத், டேவிட் மில்லர், ஸ்டீவன் பட்டேர்சன், ஆடில் ரசிட், ஜோ ரூட், ரயன் சைட்பொட்டம், அயின் வோர்ட்லோ, எட்டி வில்சன்

ஒக்லண்ட் ஆஷஸ்
கரித் ஹொப்கின்ஸ், அன்றே அடம்ஸ், ஆசார் மஹ்மூட், மிக்கேல் பேட்ஸ், பிரட்லி கசொப்பா, கொலின் டி கிரான்ட்ஹோம், மார்டின் கப்ப்டில், ரொனி ஹிரா, அனாறு கிட்சென், மிட்செல் மக் கிலேனகான், ப்ரூஸ் மார்டின், கிறிஸ் மார்டின், கைல் மில்ஸ், கொலின் முன்ரோ, லூ வின்சென்ட்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .