2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

முதற்தர ஒருநாள் அணிக்கான பலப் பரீட்சை

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


இங்கிலாந்து - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டி தொடர் ஆரம்பிக்க இருக்கின்றது. மோசமான டெஸ்ட் தோல்வியில் இருந்து மீள் வருகை காட்டி இங்கிலாந்து அணி தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. முதலாம் இரண்ட்டாம் அணிகளுக்கிடையிலான மோதலாக இந்த தொடர் அமைகின்றது என்பது மேலும் சிறப்பு. ஒரு நாள் தரப்படுத்தல்களில் இரு அணிகளும் 121 புள்ளிகளைக் கொண்டுள்ளன. ஆனாலும் இங்கிலாந்து முதலாம் இடத்தையும், தென் ஆபிரிக்க அணி இரண்டாம் இடத்தையும் கொண்டுள்ளன. தொடரை கைப்பற்றும் அணி முதல் இடத்தைப் பெறும் என்பது உறுதி. தோல்வியடையும் அணி இரண்டாமிடத்தை பறிகொடுக்கும் நிலையும் உள்ளது. ஏனெனில் இந்திய அணி 120 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளது. ஒரு போட்டி வித்தியாசத்தில் தென் ஆபிரிக்க அணி வென்றால் முதலாமிடம் உறுதி. இங்கிலாந்து அணி மூன்றாமிடத்துக்கு தள்ளப்படும்.

இந்த நிலையில் இரு அணிகளுகுமான போட்டி தொடர் முக்கியமானதாக அமைகின்றது. தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றால் அவர்கள்தான் உலகின் முதற்தர அணி என்பது உறுதியாகிவிடும். ஆனாலும் ஒருநாள்ப் போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவதில் சிக்கல்களை சந்திக்கும் அணி அல்லது தேவையான நேரங்களில் வெற்றிகளைப் பெறாமல் சொதப்பும் அணி, அல்லது தோல்விகளை சந்திக்கும் அணி. அவ்வாறு செய்யாமல் தொடரைக் கைப்பற்றினால் உண்மையில் தென் ஆபிரிக்க அணி சிறந்த அணியே. ஒரு நாள்ப் போட்டிகளில் ஏபி.டி.வில்லியர்ஸ் தலைமைப் பொறுப்பு எடுத்ததில் இருந்து சிறப்பாக வெற்றிகளைப் பெற்று வருகின்றது.

மறுபுறத்தில் இங்கிலாந்து அணி அலிஸ்டயர் குக் தலைமைப் பொறுப்பு எடுத்தும் நல்ல முறையில் செயற்பட்டு வருகின்றது. சர்ச்சைகளில் பிரச்சினைகளில் கெவின் பீற்றர்சன் சிக்கினாலும் அணியின் வெற்றிக்கு முக்கியமான வீரர் அவரே. வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வீரர் அவரே. அவர் அணியில் இல்லை என்பது தென் ஆபிரிக்க அணியை எதிர்கொள்ள இங்கிலாந்து அணி கஷ்டப் பட வேண்டிவரும். ஓட்டங்களை குவித்து வரும் இயன்பெல் இந்த தென் ஆபிரிக்க அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தால் சாதனைதான். துடுப்பாட்ட வரிசை இங்கிலாந்து அணிக்கும் பலமாக உள்ளது. ஆனாலும் இப்போதுதான் அவர்களுக்கு சரியான சோதனை. காரணம் மறுபுறத்தில் உலகின் முதற்தர பந்து வீச்சு. இதை எதிர்கொள்ள முடியுமா என்பதுதான் இங்கிலாந்து அணியின் பிரச்சினை. தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டம் மிகப் பலமானது. அதை இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு தகர்க்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அது முடியாமல் போய் விட்டது. ஒருநாள்ப் போட்டிகளில் அதை செய்து காட்ட வேண்டும்.


இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் கூட பீற்றர்சன் இல்லாமல் நல்ல சமநிலையில் உள்ளது. ஆக இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. துடுப்பாட்டம், பந்து வீச்சு என்பன சம பலமாக உள்ள போதும் போட்டிகளில் யார் சிறப்பாக செய்து காட்டப் போகிறார்கள் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்ட வரிசை அனுபவம் வாய்ந்தது. அதுதான் அவர்களின் பலம். ஆடுகளம், காலநிலை எதுவும் தென் ஆபிரிக்க அணியை சோதிப்பதாக இல்லை. மாறாக அவர்களுக்கு ஏற்றது மாதிரியே உள்ளன.

ஆக இந்த தொடர் தென் ஆபிரிக்க அணிக்கு சாதக தன்மை தருவதாகவே உள்ளது. ஆடுகளத்தில் இங்கிலாந்து, தென் ஆபிரிக்க அணிகள் என்ன செய்யப்போகின்றன என்பதில் வெற்றி - தோல்விகள் தங்கியுள்ளன. 

இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள்ப் போட்டி தொடரில் இங்கிலாந்தில் வைத்து கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
ஜாக்ஸ் கலிஸ்                          14    14    363    107      30.25       66.24     1    3
அன்று பிளின்டொப்                10      8    291      78*     28.20    108.17      0    3
நிக் நைட்                                        4      4    223      74       55.75       67.16     0    3
டரில் கல்லினன்                         7      7    222      70      31.71       61.83     0    2
ஹேசல் கிப்ஸ்                          10    10    213     74       21.30       71.95     0    2
ஹன்சி குரஞ்சே                         7       7    193     40       27.57       60.69     0    0
மார்க் பௌச்சர்                         14    12    187      55       26.71       68.24     0    1   
மார்கஸ் ட்ரெஸ்கொதிக்        4      4    182    114*     60.66       75.51     1    1
அலெக் ஸ்டுவார்ட்                    7      7    175     52        29.16         6.55     0    1

துடுப்பாட்ட வீர்களின் பெறுதியைப் பார்க்கும் போது இரண்டு அணிகளுக்குமிடையில் இங்கிலாந்தில் நடைபெறும் போட்டிகளில் துடுப்பாட்ட வீரர்கள் பெரிதளவில் ஓட்டங்களை குவிக்கவில்லை என்பது தெரிகிறது. மேல் இருக்கும் பட்டியலில் ஜக்ஸ் கலிஸ் மாத்திரமே தற்போது விளையாடும் வீரகளில் கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்.

இரண்டு அணிகளுக்குமிடையிலான ஒருநாள்ப் போட்டி தொடரில் இங்கிலாந்தில் வைத்து கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
அன்று பிளின்டொப்          10      9       73.2      315    18    21/3    17.50    4.29
அலன் டொனால்ட்              6      6       53.0      217    15    17/4    14.46    4.09
டரின் கோப்                          11    11    108          422    15    35/4    28.13    3.90
ஜேம்ஸ் அன்டர்சன்           9       9      57.0       269    11    38/4    24.45    4.71
ஜக்ஸ் கலிஸ்                      14   12       54          326    10    25/2    32.60    6.03   
மக்காயா நிட்டினி                7      7       52.0      278      9    38/3    30.88    5.34
ஸ்டுவோர்ட் ப்ரோட்           5      5       33.1     145       8    23/5    18.12    4.37
சமித் பட்டேல்                       5      3       26.4     117       7    41/5    16.71    4.38
மார்க் இல்ஹாம்                  4      4       40.0     164       7    44/3    23.42    4.10

பந்து வீச்சு பெறுதி மிக சிறப்பாகவே அமைந்துள்ளது. பந்து வீச்சாளர்களுக்கே அதிகம் போட்டிகள் சாதக தன்மையை காட்டியுள்ளது. இரு அணிகளுக்குமான பந்து வீச்சு பல பரீட்சையே தொடர் வெற்றியை முடிவு செய்யப்போகிறது. குறிப்பாக யார் பந்துவீச்சாளர்களை சரியாக கையாள்கிறார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கப் போகிறது.

இரு அணிகளுகிமிடையிலான போட்டிகளில் குறைவான போட்டிகளே விளையாடப்பட்டிருக்கின்றன. காரணம் 1994 ஆண்டே முதல் தடவையாக ஒருநாள்ப் போட்டிகளுக்காக தென் ஆபிரிக்க அணி இங்கிலாந்துக்கு சென்று இருந்தது. தென் ஆபிரிக்க அணியின் தடையினால் 1992ஆம் ஆண்டிற்கு பின்னரே தென் ஆபிரிக்க அணி போட்டிகளில் பங்கு பற்றி இருந்தது. இதுவரையில் இங்கிலாந்தில் வைத்து இரு அணிகளும் 3 தொடர்களில் மாத்திரமே விளையாடியுள்ளன. மிகுதி நான்கு தொடர்களில் இரண்டு முக்கோண போட்டி தொடர். ஓர் உலக்கக் கிண்ணப் போட்டி தொடர். மற்றது சம்பியன் ட்ரோபி போட்டி தொடர். இரு நாடுகளும் பங்கு பற்றிய தொடரில் இரண்டில் இங்கிலாந்து அணியும், ஒன்றில் தென் ஆபிரிக்க அணியும் வெற்றி பெற்றுள்ளன. மற்ற தொடர்களில் தென் ஆபிரிக்க அணியால் வெற்றி பெற முடியவில்லை. 16 போட்டிகளில் இரு அணிகளிலும் இங்கிலாந்தில் வைத்து மோதியிருக்கின்றன. 05 போட்டிகளில் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. 10 போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டு இருந்தது. கடந்த காலங்களை, வரலாறுகளை தென் ஆபிரிக்க அணி மாற்றுமா? அல்லது இங்கிலாந்து அணி டெஸ்ட் தோல்வியை ஈடு கட்டுமா?

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .