2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

இந்திய - நியூசிலாந்து டெஸ்ட் தொடர்: ஒரு முன்னோட்ட பார்வை

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 23 , மு.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மைகாலமாக மோசமான பெறுபேறுகளை காட்டி வரும் நியூசிலாந்து அணியானது இந்திய அணியை அவர்கள் மண்ணில் சந்திக்கிறார்கள். இந்திய அணியின் எதிர்கால டெஸ்ட் அணி இதுதான் என்று சொல்லக் கூடிய அணி. சச்சின் டெண்டுல்கர் மாத்திரமே உள்ளார். ராகுல் டிராவிட், லக்ஷ்மன் ஆகியோர் ஓய்வு பெற்றதை அடுத்து விளையாடப்போகும் தொடர். டிராவிட்டின் இடம் நிச்சயம் விராத் கோலிக்கு செல்லும். லக்ஷ்மனின் இடம் யாருக்கு என்பது கேள்வியே. இந்திய அணியின் எதிர்கால டெஸ்ட் நட்சத்திரம் என கருதப்படும் சேட்டேஸ்வர் புஜாரா. இவர் மூன்றாமிடத்தில் களமிறங்கி, விராத் கோலி ஐந்தாமிடத்தில் களமிறங்குவார? அல்லது ஐந்தாமிடத்தில் களமிறங்கப் போகிறாரா என்பது தலைவர் தோனியின் முடிவே. சச்சின் விலகும் காலத்தில் விராத் கோலி நான்காம் இடத்தில் விளையாடுவது அணிக்கு பலத்தைக் கொடுக்கும். அணி முகாமைத்துவத்தின் முடிவே அது. இன்னும் ஒரு வீரர் அணிக்குள் வரவேண்டிய நிலை உள்ளது. சுரேஷ் ரெய்னா அணியில் இணைக்கப்பட்டுள்ளார். அவரை அணிக்குள் நிரந்தரமாக கொண்டு வரவேண்டும் என்பது இந்திய அணிக்கு நிச்சயமான ஒரு விருப்பமாக இருக்கும். அணிக்குள் மீண்டும் பத்திரிநாத் கொண்டு வரப்படுள்ளார். ரோஹித் ஷர்மாவின் தொடர் சொதப்பல் பத்திரிநாத் இற்கான இடம் கிடைத்துள்ளது. ஆனால் விளையாட வாய்ப்பில்லாமலே தமிழ் நாட்டின் வீரர் பத்திரிநாத் இருப்பார் என்றே தோன்றுகிறது.

நான்கு பந்துவீச்சாளர்களில் சகீர் கான், அஷ்வின் விளையாடுவது உறுதி. இரண்டு சுழல்ப் பந்துவீச்சாளர்கள் என்றால் பிரக்ஜன் ஓஜா விளையாட வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் அணிக்குள் ஏன் பியுஷ் சாவ்லா என்பது புரியவில்லை. வேகப் பந்துவீச்சில்  இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோருக்கிடையில் போட்டி நிலவும். இரண்டு டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே விளையாடப் படவுள்ளன. அதிக வாய்ப்புக்கள் வீரகளுக்கு கிடைக்கும் என நம்ப முடியாது.

மறுபுறத்தில் நியூசிலாந்து அணி. அவர்களுடைய முக்கிய டெஸ்ட் வீரர் டானியல் வெட்டோரி இல்லாமல் களமிறங்கவுள்ளது. இவர்தான் இந்திய அணிக்கு பந்துவீச்சில் மிக நெருக்கடி கொடுக்கக்கூடியவர். அவர் இல்லை. அது மட்டுமல்லாமல் அண்மையில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் மிக மோசமான தோல்வியை சந்தித்து விட்டு இப்போது இந்தியா வந்துள்ளது நியூசிலாந்து அணி. இந்திய விளம்பரங்களோ நன்றா விருந்தினர்களை கவனித்து அனுப்புவோம் என்று தொலைக்காட்சிகள் அடிகடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு புது அணியாகவே தென்படுகிறது. ரொஸ் டெய்லர், பிரெண்டன் மக்கலம் தவிர பெரிதளவில் யரையும் சொல்ல முடியவில்லை. பந்து வீச்சு கொஞ்சம் பரீட்சயமானதாக உள்ளது. ரிம் சௌதி, கிறிஸ் மார்டின் ஆகியோர் ஏற்கனவே விளையாடி அனுபவமான வீரர்கள். ஜீதன் படேல் சுழல்ப் பந்துவீச்சாளராக களமிறங்குவார். மார்டின் கப்தில் துடுப்பாட்டத்தில் நம்பகரமானவர். ஓட்டங்களை தொடர்ச்சியாக குவித்து வரும் ஒருவர். மற்றவர்கள் இந்திய மண்ணில் எந்தளவிற்கு செய்து காட்டுவார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி.

இந்த தொடர் நிச்சயமாக இந்திய அணிக்கு சாதனைகளை அள்ளி தரும் என நம்பலாம். தன் புதிய துடுப்பாட்ட வரிசையை சோதிக்க இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இது. ஆனால் நியூசிலாந்து அணிக்கு சோதனை தொடர் இது. தற்போது விளையாடும் நியூசிலாந்து வீரர்களில் கேன் வில்லியம்சன் மாத்திரமே இந்திய அணியுடன் பிரகாசித்துள்ளார். பிரண்டன் மக்லம் ஓர் இன்னிங்சில் அடித்த 225 ஓட்டங்கள் மாத்திரமே குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் கிறிஸ் மார்டின் 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். மொத்தத்தில் இந்த நியூசிலாந்து அணி இந்தியாவில் விளையாடப்போகும் புதிய அணியே. இந்தியாவில் வைத்து நல்ல அணிகள் வந்தாலே விளையாட கஷ்டப்படும். பலமிழந்த நிலையில் வந்து இருக்கும் நியூசிலாந்து அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை சொல்ல முடியாது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்புகளே அதிகம் உள்ளன.

இந்தியாவில் வைத்து கூடுதலான ஓட்டங்களைப் பெற்றவர்கள்
ராகுல் டிராவிட்                 8    14     893    222      63.78     4    1   
பேர்ட் சட்க்லிப்ட்              9    16     885    230*    68.07     3    3
ஜோன் ரீட்                           9    16     691    120     49.35     2    3
சச்சின் டெண்டுல்கர்     11    18     690    217     49.28     2    3   
விரேந்தர் சேவாக்             5      9     575    173     71.87     2    3
வினு மன்கட்                     4      5     526    231    105.20    2    0
விஜய் மஞ்சேகார்           6       8     507    177      84.50    3    1

இந்தியாவில் வைத்து கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றியவர்கள்
வெங்கட்ராகவன்               9    17    505.4       913      43      72/8      21.23     1.80
அணில் கும்ப்ளே               8    12    410.1       850      39      67/6      21.79     2.07
பிசன் சிங் பேடி                    6    12    391.0       598      37      42/6     16.16     1.52
சுபாஷ் குப்தே                      5    10    356.4       669      34    128/7    19.67      1.87
ரிச்சட் ஹார்ட்லி                6    10    227.5       689      31      49/6     22.22      3.02
டானியல் வெட்டோரி      8    13    531.0    1388      31    127/6     44.77      2.61
நரேந்திர ஹிர்வானி          4      7    199.0       449      26      59/6     17.26      2.25
பகவத் சந்திரசேகர்            5    10    277.1       683      25      77/4    27.32       2.46
 
இந்திய அணியின் சுழல்ப் பந்து வீச்சு நியூசிலாந்தை பதம் பார்த்து இருக்கிறது கடந்த காலங்களில். மேலுள்ள பட்டியலில் உள்ள பந்து வீச்சாளர்களில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அத்தனை பேரும் சுழல்ப் பந்துவீச்சாளர்கள். முதலாமவர் தமிழ் நாட்டு வீரர். இப்போது அஷ்வின் இந்திய அணியின் முதற்தரப் பந்துவீச்சாளர். அஷ்வினுக்கு இம்முறை விக்கெட்கள் கிடைக்கப் போகின்றனவா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம். 

1955ஆம் ஆண்டு இரு நாடுகளுக்குமான போட்டி தொடர் இந்தியாவில் ஆரம்பமாகி இருந்தது. இதுவரை 10 தொடர்களில் இரு அணிகளும் மோதியுள்ளன. இந்திய அணி 8 தொடர்களில் வென்றுள்ளது. இரண்டு தொடர்கள் சமநிலை முடிவு. ஆக நியூசிலாந்து அணி இதுவரை ஒரு தொடரை தானும் இந்தியாவில் வைத்து வெல்லவில்லை. இரண்டு போட்டிகளில் மாத்திரமே இந்திய அணியை வென்றுள்ளது. 29 போட்டிகளில் இரு அணிகளும் இந்தியாவில் வைத்து சந்தித்துள்ளன. 16 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. இந்திய அணி 11 போட்டிகளில் வென்றுள்ளது. இரு அணிகளும் சமநிலை நோக்கி அதிகம் விளையாடியுள்ளன என்பது தெளிவாக தெரிகிறது. இம்முறை அப்படி நடக்க வாய்ப்புக்கள் குறைவு என்றாலும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன என்பது அதற்கான வாய்ப்புக்களை உருவாக்கி விடமுடியும்.

இந்த போட்டி தொடரில் தோனிக்கு அழுத்தங்கள் உள்ளன. டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் அவர் பெரிதாக அண்மைக்காலத்தில் செய்வதாக இல்லை. டிராவிட், லக்ஷ்மன் ஆகியோரின் ஓய்வுக்கு அவரின் அழுத்தம் முக்கிய காரணம் என்பது எல்லோருக்கும் மிக நன்றாக தெரியும். லக்ஷ்மன் ஓய்வு விடயத்தில் அது மிக வெளிப்படையாக தெரிந்தது. அந்த வெற்றிடங்களை இல்லாமல் செய்ய வேண்டும். இள வயது வீரர்களை வைத்து வெற்றி பெற்றுக்காட்ட வேண்டும். செய்து காட்டினால் வெற்றி. இல்லாவிட்டால் முன்னாள் வீரர்கள், ஊடகங்கள் தோனியை விட்டு வைக்கப் போவதில்லை.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .