2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ஐ.பி.எல். : கடந்த இரு வாரங்களும் முதற்சுற்றும்

A.P.Mathan   / 2012 மே 21 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 06ஆம் திகதி இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதற் போட்டி 49ஆவது போட்டியாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணிகளுக்கு இடையில் மும்பையில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. இதில் டுவைன் பிராவோ 40 ஓட்டங்கள், முரளி விஜய் 41 ஓட்டங்கள். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் லசித் மலிங்க, ஆர்பி.சிங் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 74 ஓட்டங்கள். ரோஹித் ஷர்மா 60 ஓட்டங்கள். பந்து வீச்சில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி சார்பாக பென் ஹில்பான்ஹோஸ், டுவைன் பிராவோ, ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள். இந்த போட்டி மிக விறு விறுப்பாக நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி பக்கமாக இருந்த போட்டி சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணியின் பக்கமாக மாறியது. இறுதி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவை. இறுதி 3 பந்துகளில் 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் டுவைன் ஸ்மித் 6, 4, 4 என அடித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு  வெற்றி பெற்றுக் கொடுத்து போட்டியின் நாயகனாக மாறினார்.

ஐபிஎல் போட்டி தொடரின் 50ஆவது போட்டி பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ், டெக்கன் சார்ஜஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய டெக்கன் சார்ஜஸ் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்றது. இந்த போட்டியில் ஷிகார் தவான் 73 (ஆட்டமிழக்காமல்) ஓட்டங்களையும், டானியல் ஹரிஸ் 45 ஓட்டங்களையும், கமரூன் வைட் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி நல்ல ஆரம்பத்தை பெற்ற போதும் நடுவில் விக்கெட்கள் விழ வெற்றி பெறும் வாய்ப்பு கஷ்டமானது. களமிறங்கினர் ஏபி டி. வில்லியர்ஸ். எல்லா பக்கமும் அடித்து தாக்கி வெற்றியை பெற்றுக் கொடுத்தார். 17 ஓவர்களில் 143/5 என்ற நிலை. அடுத்த 11 பந்துகளில் 42 ஓட்டங்கள். என்ன அடி என யோசித்து பாருங்கள். டில்ஷான் 71 ஓட்டங்கள். ஏபி டி. வில்லியர்ஸ் 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்கள். பந்து வீச்சில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்கள். இந்த போட்டியின் நாயகனாக பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணியின் ஏபி டி. வில்லியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இந்த போட்டி பெங்களூரில் நடைபெற்றது.

அடுத்த போட்டி மே 07ஆம் திகதி கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டெயா டெவில்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டி டெல்லியில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி டெயா டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களைப் பெற்றது. இதில் இர்பான் பதான் 36 ஓட்டங்கள், மஹேல ஜெயவர்தன 30 ஓட்டங்கள். பந்து வீச்சில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக  சுனில் நரைன் 2 விக்கெட்கள். ஜக்ஸ் கலிஸ் 2 விக்கெட்டுகள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிரெண்டன் மக்கலம் 56 ஓட்டங்களையும், கெளதம் கம்பீர் 36 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகள். இந்த போட்டியில் 6 விக்கெட்களால் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் நாயகனாக கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஜக்ஸ் கலிஸ் தெரிவு செய்யப்பட்டார். 

52ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ், பூனே வொரியேர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பூனே வொரியேர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அனுஷ்டப் மஜும்டர் 30 ஓட்டங்களை பெற்றார். பதிலளித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது. ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷேன் வொட்சன் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் நாயகனாக தெரிவானார்.

53ஆவது போட்டி டெக்கன் சார்ஜஸ், கிங்ஸ்11 பஞ்சாப் அணிகளுக்கிடையில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று டெக்கன் சார்ஜஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. கிங்ஸ்11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களைப் பெற்றது. இந்த போட்டியில் மந்தீப் சிங் 75 ஓட்டங்களைப் பெற்றார். டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 28 ஓட்டங்கள். பந்து வீச்சில் டெக்கன் சார்ஜஸ் அணி சார்பாக ஆசிஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளை  கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெக்கன் சார்ஜஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. இதில், டானியல் ஹரிஸ் 30 ஓட்டங்கள். பந்து வீச்சில் பிரவீன் குமார் 15 ஓட்டங்களிர்ற்கு 2 விக்கெட்கள். டேவிட் ஹஸ்ஸி 1 ஓவரில் 2 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்கள். பிரவிந்தர் அவ்னா 2 விக்கெட்டுகள். இந்த போட்டியின் நாயகனாக கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் மந்தீப் சிங் தெரிவு செய்யப்பட்டார். இந்த தோல்வியின் மூலமாக டெக்கன் சார்ஜெஸ் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்புக்களை முழுமையாக இழந்தது.

54ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தினேஷ் கார்த்திக் 44 ஓட்டங்களையும், சச்சின் டெண்டுல்கர் 24 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி சார்பாக வினை குமார், முரளிதரன், ஹர்ஷால் படேல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி 18 ஓவர்களில் 1 விக்கெட்டை  இழந்து 142 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதில் க்றிஸ் கெயில் 82 ஓட்டங்களைப் ஆட்டமிழக்காமல் பெற்றார். போட்டியின் நாயகன் அவரே. விராத் கோளி ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்கள்.

55ஆவது போட்டியில் டெக்கன் சார்ஜஸ், டெல்லி டெயாடெவில்ஸ் அணிகள் மே 10ஆம் திகதி ஹைதராபாத்தில் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கன் சார்ஜஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப் பெற்றது. இதில ஷிகார் தவான் 84 ஓட்டங்களையும், கமரூன் வைட் 65 ஓட்டங்களையும் பெற்றனர். டெல்லி டெயாடெவில்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் வருண் அரோன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  டேவிட் வோர்னரின் அபார சதம் - டெல்லி டெயாடெவில்ஸ் அணிக்கு வெற்றியை கொடுத்தது. ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 109 ஓட்டங்கள். நாமன் ஓஜா ஆட்டமிழக்காமல் 64 ஓட்டங்கள். இவர்களது இணைப்பாட்டம் 189 ஓட்டங்கள். டெல்லி டெயாடெவில்ஸ் அணி 16.4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. இந்த அணிகளுக்கிடையிலான முதற் போட்டியில் கெவின் பீற்றர்சன் சதமடித்து வென்று கொடுத்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் நாயகன் டேவிட் வோர்னர்.

56ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது சென்னை சுப்பர் கிங்க்ஸ். துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பிரட் ஹொட்ஜ் 33 ஓட்டங்கள். பென் ஹில்பான்ஹோஸ், யோ மகேஷ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள். பதிலளித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சுரேஷ் ரெய்னா 23 ஓட்டங்கள். அனிருத் ஸ்ரீகாந்த் அல்பி மோர்க்கல் ஆகியோர் ஆட்டமிழக்காமல் தலா 18 ஓட்டங்கள். (இருவரும் 6 பந்துகளை எதிர்கொண்டு இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி) பந்து வீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக பங்கஜ் சிங்க், சித்தார்த் திரிவேதி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள். போட்டியின் நாயகனாக பென் ஹில்பான்ஹோஸ் தெரிவானார். இந்த போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது.

11ஆம் திகதி 57ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ், பூனே வொரியேர்ஸ் அணிகள் மோதின. இந்த இரண்டு அணிகளும் தங்களுக்கிடையிலான  இரண்டாவது போட்டியில் மோதின. இந்த போட்டி பூனேயில் நடைபெற்றது. பூனே வொரியேர்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களைப் பெற்றது. இதில் க்றிஸ் கெயில் 57 ஓட்டங்கள், திலகரத்ன தில்ஷான் 53 ஓட்டங்கள். பதிலளித்த பூனே வொரியேர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரொபின் உத்தப்பா 38 ஓட்டங்கள், அனுஷ்டப் மஜும்டர் 31 ஓட்டங்கள். வினை குமார் 3 விக்கெட்டுகள், முரளிதரன், சகீர் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்கள். பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியின் நாயகனாக க்றிஸ் கெயில் தெரிவானார்.

12ஆம் திகதி 58ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரோஹித் ஷர்மா 109 ஓட்டங்கள் 60 பந்துகளில் (ஆட்டமிழக்காமல்), உபாதையில் இருந்து வந்த ஹெர்சல் கிப்ஸ் ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது இணைப்பாட்டம் 167 ஓட்டங்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜக்ஸ் கலிஸ் 79 ஓட்டங்கள். யூசுப் பதான் ஆட்டமிழக்காமல் 40 ஓட்டங்கள். போட்டியின் நாயகன் ரோஹித் ஷர்மா.

59ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்க்ஸ், டெல்லி டெயாடெவில்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது சென்னை சுப்பர் கிங்க்ஸ். துடுப்பெடுத்தாடிய டெல்லி டெயாடெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்களைப் பெற்றது. இதில் யோகேஷ் நாயர் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்கள். வேணுகோபால் ராவ் 27 பென் ஹில்பான்ஹோஸ் 3 விக்கெட்கள். பதிலளித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 15.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் முரளி விஜய் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும், மைக்கல் ஹஸ்ஸி 38 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக பென் ஹில்பான்ஹோஸ் தெரிவானார். இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

மே மாதம் 13ஆம் திகதி முதற் போட்டியாக பூனே வொரியேர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. ஐபிஎல் போட்டியின் 60ஆவது போட்டியாகும். இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அஜிங்கயா ரெஹானே 61 ஓட்டங்களையும், ஷேன் வொட்சன் 58 ஓட்டங்களைப் பெற்றனர். பந்து வீச்சில் டெல்லி பூனே வொரியேர்ஸ் அணி சார்பாக ஆசிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பூனே வொரியேர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸ்டீவென் ஸ்மித் 37 ஓட்டங்களைப் பெற்றார். அஜித் சன்டிலா பந்து வீச்சில் 4 ஓவர்களில் 13 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி போட்டியின் நாயகனாக தெரிவானார். ஷேன் வொட்சன், ஜொகான் போதா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அன்றையதினம் இரண்டாவது போட்டியில் கிங்ஸ் 11 பஞ்சாப், டெக்கன் சார்ஜஸ் அணிகள் மோதின. 61ஆவது போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெக்கன் சார்ஜஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ஓட்டங்களைப் பெற்றது. இதில ஷிகார் தவான் 71 ஓட்டங்களையும், கமரூன் வைட் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும் பெற்றனர். கிங்ஸ் 11 பஞ்சாப் அணி சார்பாக பந்து ஆஷர் மொஹம்மட் இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார்.  கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. இந்த போட்டியில் டேவிட் ஹஸ்ஸி 35 பந்துகளில் 65 ஓட்டங்களை அடித்து போட்டியின் நாயகனாக தெரிவானார். ஆஷர் மொஹம்மட் 31 ஓட்டங்கள். பந்து வீச்சில் டேல் ஸ்டைன், டானியல் கிறிஸ்டியன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள்.

பெங்களூர் சின்னஸ்வாமி மைதானத்தில் 62ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மும்பை இந்தியன்ஸ் களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மயன்க் அகர்வால் 64 ஓட்டங்களையும், திலகரத்ன தில்ஷான் 44 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. அம்பாத்தி ராயுடு 81 ஓட்டங்களையும் கிரண் பொல்லார்ட் 52 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களது இணைப்பாட்டம் ஆட்டமிழக்காத 122 ஓட்டங்களை தந்தது. போட்டியின் நாயகனாக அம்பாத்தி ராயுடு தெரிவானார். 

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்பந்து வரை சென்ற இந்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. இதில் கெளதம் கம்பீர் 62 ஓட்டங்களையும், பிரெண்டன் மக்கலம் 37  ஓட்டங்களையும் பெற்றனர். சதாப் ஜாகர்தி பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக  2 விக்கெட்கள். பதிலளித்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மைக்கல் ஹஸ்ஸி 56 ஓட்டங்களையும், முரளி விஜய் 36 ஓட்டங்களையும் பெற்றனர். சுனில் நரைன், ரஜத் பாத்தியா ஆகியோர் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாக இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக மைக்கல் ஹஸ்ஸி தெரிவானார்.

டெல்லி டெயாடெவில்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. 64ஆவது போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள்  இழப்பிற்கு 136 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் ஹஸ்ஸி 40 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அடித்தார். டெல்லி டெயாடெவில்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும், வருண் அரோன் 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். பதிலளித்த டெல்லி டெயாடெவில்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 140 ஓட்டங்களைப் பெற்றது.

மஹேல ஜெயவர்தன ஆட்டமிழக்காமல் 60 ஓட்டங்களையும், நாமன் ஓஜா 34 ஓட்டங்களையும் அடித்தனர். பிரவிந்தர் அவனா 3 விக்கெட்கள். போட்டியின் நாயகனாக உமேஷ் யாதவ் தெரிவானார்.

16ஆம் திகதி 65ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இரண்டாவது தடவையாக மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 140 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மனோஜ் திவாரி 41 ஓட்டங்களையும், கெளதம் கம்பீர் 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஆர்பி.சிங் 2 விக்கெட்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 108 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் 27 ஓட்டங்கள். சுனில் நரைன் 15 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி போட்டியின் நாயகனாக தெரிவானார். 

கிங்ஸ் 11 பஞ்சாப், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 120 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டுவைன் பிராவோ 48 ஓட்டங்களை பெற்றார். பிரவிந்தர் அவ்னா, ஆஷர் மொஹம்மட், பிரவின் குமார் ஆகியோர் பந்துவீச்சில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணி சார்பாக தலா 2 விக்கெட்கள். பதிலளித்த கிங்ஸ் 11 பஞ்சாப் அணி 16.3 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அடம் கில்க்ரிஸ்ட் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும், மந்தீப் சிங்க் 24 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக அடம் கில்க்ரிஸ்ட் தெரிவானார்.

ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டி டெல்லி டெயாடெவில்ஸ், பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணிகளுக்கிடையில் 67ஆவது போட்டியாக இடம்பெற்றது. டெல்லி டெயாடெவில்ஸ் அணி நாணயசுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பில் ஈடுபட்டது. துடுபெடுத்தாடிய அணிக்கு க்றிஸ் கெயில் வான வேடிக்கை காட்டி ஓட்டங்களை குவித்தார். ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்கள். விராத் கோளி 73 ஓட்டங்கள். 204 ஓட்டங்கள் இருவருது இணைப்பாட்டமும். பதிலளித்த டெல்லி டெயாடெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்றது. ரொஸ் டெய்லர் 55 ஓட்டங்களையும், வேணுகோபால் ராவ் 36 ஓட்டங்களையும் அடித்தனர். சகீர் கான், பிரசாந்த் பரமேஸ்வரன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வினை குமார் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக க்றிஸ் கெயில் தெரிவானார்.

68ஆவது போட்டியில் டெக்கன் சார்ஜஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ராகுல் டிராவிட் 39 ஓட்டங்கள். டேல் ஸ்டைன், வீர் பிரதாப் சிங்க், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலளித்த டெக்கன் சார்ஜஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் அக்சாத் ரெட்டி 42 ஓட்டங்கள். பந்து வீச்சில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி சார்பாக சித்தார்த் திரிவேதி இரண்டு விக்கெட்கள். போட்டியின் நாயகனாக டேல் ஸ்டைன் தெரிவு செய்யப்பட்டார். இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது.

டெல்லி டெயாடெவில்ஸ், கிங்ஸ் 11 பஞ்சாப் அணிகளுக்கிடையிலான போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. 69ஆவது போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது டெல்லி டெயாடெவில்ஸ் அணி. 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 136 ஓட்டங்களைப் பெற்றது கிங்ஸ் 11 பஞ்சாப் அணி. சித்தார்த் சிட்டின்ஸ் 38 ஓட்டங்களையும் ஆஷர் மொஹம்மட் 36 ஓட்டங்களையும் பெற்றனர். டெல்லி டெயாடெவில்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் மோர்னி மோர்கல் 4 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார். பதிலளித்த டெல்லி டெயாடெவில்ஸ் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட் வோர்னர் 78 ஓட்டங்களை பெற்றார். ராயன் ஹரிஸ், ஆஷர் மொஹம்மட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். போட்டியின் நாயகனாக உமேஷ் யாதவ் தெரிவானார்.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ், பூனே வொரியேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி பூனேயில் 19ஆம் திகதி நடை பெற்றது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 136 ஓட்டங்களைப் பெற்றது. இதில் சகிப் அல் ஹசன் 42 ஓட்டங்களையும் பிரெண்டன் மக்கலம் 41 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் வெய்னி பார்னெல் 2 விக்கெட்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பூனே வொரியேர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஜெசி ரெய்டர் 22 ஓட்டங்கள். சகிப் அல் ஹசன் 2 விக்கெட்களையும், யூசுப் பதான் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக சகிப் அல் ஹசன் தெரிவானார். 

முதல் சுற்றின் இறுதி நாள் போட்டிகளில் முதற் போட்டி பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ், டெக்கன் சார்ஜஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ், அணி வென்றால் அடுத்த சுற்று. இல்லாவிட்டால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் என்ற விறு விறுப்பான நிலையில் டெக்கன் சார்ஜஸ் அணி வெற்றி பெற்று பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணியை வெளியேற்ற, நடப்பு சாம்பியன் ஆன சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு தெரிவானது. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ். துடுப்பெடுத்தாடிய டெக்கன் சார்ஜஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களைப் பெற்றது. இதில ஜேபி டுமினி 74 ஓட்டங்களை பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ் அணி டேல் ஸ்டைனின் பந்துவீச்சில் மாட்டிக் கொண்டது. 20 ஓவர்களில் 9 விக்கெட்டைகளை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. இந்த போட்டியில் விராத் கோளி 42 ஓட்டங்களை பெற்றார். சௌரப் திவாரி 30 ஓட்டங்கள். பந்து வீச்சில் டேல் ஸ்டைன் 4 ஓவர்கள் 8 ஓட்டங்கள் 3 விக்கட்கள். போட்டியின் நாயகன் அவரே, ஆசிஷ் ரெட்டி 3 விக்கெட்கள்.

முதற் சுற்றின் இறுதிப் போட்டி மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. வெற்றியோ தோல்வியோ எந்த மாற்றங்களையும் தராது என்ற நிலையில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷேன் வொட்சன் 45 ஓட்டங்கள். ஸ்டுஒர்ட் பின்னி  30 ஓட்டங்கள், மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக பந்து வீச்சில் தவல் குல்கர்னி 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 163 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. துடுப்பாட்டத்தில் டுவைன் ஸ்மித் 87 ஓட்டங்கள். சச்சின் டெண்டுல்கர் 58 ஓட்டங்கள். டுவைன் மும்பை ஸ்மித் இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி பெற்றுக் கொடுத்து போட்டியின் நாயகனாக மாறினார்.  

புள்ளி நிலைவரங்கள்
டெல்லி டெயாடெவில்ஸ்                       16    11    5    0    0    22    +0.617
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்             16    10    5    0    1    21    +0.561
மும்பை இந்தியன்ஸ்                                16    10    6    0    0    20    -0.100
சென்னை சுப்பர் கிங்ஸ்                             16      8    7    0    1    17    +0.100
பெங்களூர் ரோயல்ஸ் சலன்ஜெர்ஸ்   16      8    7    0    1    17    -0.022
கிங்ஸ் 11 பஞ்சாப்                                        16      8    8    0    0    16    -0.216
ராஜஸ்தான் ரோயல்ஸ்                            16       7    8    0    0    14    +0.201
டெக்கன் சார்ஜஸ்                                        16      4    11    0    1    09    -0.509
பூனே வொரியேர்ஸ்                                    16      4    12    0    0    8    -0.551

முதற்ச் சுற்று நிறைவில் துடுப்பாட்டத்தில் முன்னிலையில் உள்ளவர்கள்
க்றிஸ் கெயில்                  15    14    733    128    61.08    1    7
சிகர் தவான்                        15    15    569    84    40.64    0    5
அஜிங்கயா ரெஹானே  16    16    560    103*    40.00    1    3
கௌஹம் கம்பீர்              15    15    556    93    39.71    0    6
விரேந்தர் ஷேவாக்           14    14    484    87*    37.23    0    5

முதற்ச் சுற்று நிறைவில் பந்து வீச்சில்  முன்னிலையில் உள்ளவர்கள்
மோர்னி மோர்க்கல்     15    15    416/25        20/4    16.64
சுனில் நரையன்             13    13    263/23        19/5    11.95
லசித் மாலிங்க               13    13    309/22        16/4    22.04
வினை குமார்                  15    14    480/19         22/3    25.26
டேல் ஸ்டைன்               12    12    285/18           8/3    15.83

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .