Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2012 மார்ச் 04 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய போட்டி இடம்பெற்ற பிறிஸ்பேண் ஆடுகளத்தில் இடம்பெற்ற இறுதி 6 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளை அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணி தோற்றிருந்த போதிலும், பிறிஸ்பேண் ஆடுகளத்தில் இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடிய அணி பெற்ற அதிக ஓட்டங்கள் என்ற சாதனையைப் படைத்தது.
இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் 300இற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றிருந்தன. சுற்றுத் தொடரொன்றின் இறுதிப்போட்டியில் இவ்வாறு இடம்பெறும் நான்காவது தடவை இதுவாகும்.
இத்தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இலங்கை அணி இரு தடவைகள் தோல்வியையும், 3 தடவைகள் வெற்றியையும் சந்தித்துள்ளது. ஆனால் பெறப்பட்ட இரு தோல்விகளும் 5 மற்றும் 15 ஓட்டங்கள் வித்தியாசத்திலேயே பெறப்பட்டன.
அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வோணர் தனது முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டிச் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 163 ஓட்டங்களைப் பெற்றார். இது அவுஸ்திரேலியா சார்பாக பெறப்பட்ட 6ஆவது அதிக ஓட்டங்கள் ஆகும். அத்தோடு பிறிஸ்பேண் மைதானத்தில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்களும் இதுவாகும். அத்தோடு இறுதிப்போட்டியில் பெறப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். சனத் ஜெயசூரியவின் 189 ஓட்டங்களும், மார்க் வோ இன் 173 ஓட்டங்களும் முதலிரண்டு இடங்களில் காணப்படுகின்றன. அத்தோடு அவுஸ்திரேலியாவில் வைத்துப் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்கள் இவையாகும்.
டேவிட் வோணரின் 163 ஓட்டங்கள் - இலங்கைக்கெதிராக அவுஸ்திரேலிய வீரர் பெற்ற அதிகூடிய ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்களாகும்.
இறுதிப்போட்டிகளில் இரண்டு தடவைகள் 70இற்கு மேற்பட்ட ஓட்டங்களை விட்டுக்கொடுத்த முதலாவது பந்துவீச்சாளராக லசித் மலிங்க இன்று மாறினார். முன்னதாக 2009ஆம் ஆண்டில் இந்தியாவுக்கெதிராக கொம்பக் கிண்ண இறுதிப்போட்டியில் 81 ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார் லசித் மலிங்க.
இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இறுதி 6 துடுப்பாட்ட வீரர்களும் இணைந்து 178 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இது இலங்கை சார்பாக இறுதி 6 வீரர்களும் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகும்.
இன்றைய போட்டியின் இலங்கையின் நுவான் குலசேகர 73 ஓட்டங்களைப் பெற்றார். இது இலங்கையின் எட்டாம் இலக்க வீரர் பெற்ற அதிகூடிய ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்களாகும். இது அவரது இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி அரைச்சதமாகும்.
இன்றைய தினம் அவுஸ்திரேலியாவின் பென் ஹில்பன்ஹோஸ் 4 ஓவர்களில் 46 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஒரு ஓவருக்கு சராசரியாக 11.50 ஓட்டங்களை அவர் விட்டுக் கொடுத்தார். இது 4 ஓவர்களாவது வீசிய பின்னர் அவுஸ்திரேலிய வீரரொருவர் ஒரு ஓவருக்கு அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த இரண்டாவது மோசமான சந்தர்ப்பமாகும்.
இன்றைய தினம் தனது 135ஆவது ஒருநாள் சர்வதேசப் போட்டி இனிங்ஸ் இல் துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க, முதலாவது தடவையாக ஆறாம் இலக்கத்தில் துடுப்பெடுத்தாடினார்.
இன்றைய தினம் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து நொருக்கினர். இத்தொடரில் அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் - இலங்கை அணிக்கெதிராகத் தடுமாறி வருகின்றனர்.
இத்தொடரில் இந்திய அணிக்கெதிராக அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் 20.29 என்ற சராசரியிலும், 4.68 என்ற ஓட்ட விகிததத்திலும் பந்துவீசியுள்ளனர். மறுபுறத்தில் இலங்கை அணிக்கெதிராக 31.96 என்ற சராசரியிலும், 5.59 என்ற ஓட்ட விகிதத்திலும் பந்து வீசுகின்றனர்.
அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களில் பிரட் லீ, பென் ஹில்பன்ஹோஸ் மற்றும் ஜேம்ஸ் பற்றின்சன் மூவரும் இன்றைய தினம் 18 ஓவர்களில் 154 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர். மூவரும் இணைந்து சராசரியாக ஒரு ஓவருக்கு 8.55 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர்.
இன்றைய போட்டியில் குமார் சங்கக்கார இலங்கை அணி சார்பாக தனது 10,000 ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். அவர் ஏற்கனவே 10,000 ஒருநாள் சர்வதேசப் (ஏசியா 11 உட்பட) போட்டி ஓட்டங்களைப் பூர்த்தி செய்துள்ள போதிலும், இலங்கை அணி சார்பான 10,000 ஒருநாள் சர்வதேசப் போட்டி ஓட்டத்தை இன்றே பூர்த்தி செய்தார்.
இன்றைய தினம் மஹேல ஜெயவர்தன ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் மொத்தமாக அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களின் வரிசையில் எட்டாம் இடத்திற்கு முன்னேறினார். இன்றைய தினம் மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திரம் பிரைன் லாராவை முந்தினார் மஹேல ஜெயவர்தன. ஜெயவர்தன இதுவரை 368 போட்டிகளில் 10,406 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (க்ரிஷ்)
piratheepan Monday, 05 March 2012 04:47 PM
ilankai aniye enrum BEST
Reply : 0 0
piratheepan Monday, 05 March 2012 04:50 PM
super team sri lanka
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago