2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடந்தவார களங்கள்... (மே 21 - 27)

A.P.Mathan   / 2012 மே 30 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறுதிக் கட்ட ஐ.பி.எல்.

ஐ.பி.எல். போட்டிகளின் இந்த வருட தொடரின் இறுதி வாரம். இறுதி நான்கு அணிகளுக்கான போட்டிகள் மாத்திரமன்றி கிண்ணதுக்குமான போட்டியும் கூட. இறுதிப் போட்டியில் ஏற்கனவே இரண்டு தடவைகள் சம்பியன் ஆனா சென்னை சுப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் முதற் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று சம்பியன் ஆனது. முதற்ச் சுற்று நிறைவடைந்து நான்கு அணிகள் இறுதிப் போட்டி தகுதிகான் சுற்றுக்கு தெரிவாகின.

முதல் இரண்டு இடங்களைப் பெற்ற டெல்லி டெயார் டெவில்ஸ், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் முதல் தகுதிகான் போட்டியில் மோதின. இந்த போட்டி பூனேயில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ஓட்டங்களைப் பெற்றது. இதில் யூசுப் பதான் 40 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார். இந்த தொடரில் அவர் பெற்ற கூடுதலான ஓட்டங்கள் இதுவே. கெளதம் கம்பீர் 32 ஓட்டங்களைப் பெற்ற அதேவேளை பிரெண்டன் மக்லம் 31 ஓட்டங்களைப் பெற்றார். ஜக்ஸ் கலிஸ் 30 ஓட்டங்கள். பந்து வீச்சில் இர்பான் பதான் 4 ஓவர்கள் 20 ஓட்டங்கள் 1 விக்கெட். பவான் நேஜி 4 ஓவர்கள் 18 ஓட்டங்கள் 1 விக்கெட். உமேஷ் யாதவ் 1 விக்கெட்.

பதிலழித்த டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 144 ஓட்டங்களைப் பெற்றது. மஹேல ஜெயவர்தன வெற்றி இலக்கு நோக்கி போராடிய போதும் மற்ற துடுப்பாட்ட வீரர்களின் உதவி இல்லாமையால் 18 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. மஹேல ஜெயவர்தன 40 ஓட்டங்கள். நாமன் ஓஜா 28 ஓட்டங்கள். ஜக்ஸ் கலிஸ், சுனில் நரையன் ஆகியோர் 4 ஓவர்கள் பந்து வீசி 24 ஓட்டங்களை கொடுத்து 2 இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக யூசுப் பதான் தெரிவானார். கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.முதற்தடவையாக கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.


அடுத்த போட்டி மும்பை இந்தியன்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இது ஓர் அணியை வெளியேற்றுவதற்கான போட்டி. வெற்றி பெறும் அணி முதல் தகுதிகான் போட்டியில் தோல்வியடைந்த டெல்லி அணியுடன் மோதும். இந்த போட்டியில் தோல்வியடையும் அணி 4ஆம் இடத்தைப் பெறும். அடுத்த சுற்று வாய்ப்பு இல்லாமல் போகும். வெற்றி பெறும் அணி, அணியுடன் வென்றால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும். தோல்வியடைந்தால் மூன்றாம் இடத்தைப் பெறும். சம்பியன் லீக் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் பெறும்.

சென்னை அணி மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் இந்த சுற்றுக்கு தெரிவானது. மும்பைப் இந்தியன்ஸ் அணி குழு நிலையில் 3ஆம் இடத்தைப் பெற்றது. இந்த போட்டி மூன்றாம், நான்காம் அணிகளுக்கிடையிலேயே நடைபெற்றது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்று தகுதிகான் போட்டிக்கு (அரை இறுதிப் போட்டிக்கு ஒப்பானது) தெரிவானது. பெங்கலூரில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பம் மிக மோசமாக அணிக்கு அமைந்தது. ஆனாலும் மைக்கல் ஹஸ்ஸி, பத்ரிநாத் ஆகியோருடைய 93 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டம் அணியின் நிலையை மாற்றியது. டோனி, பிராவோ ஆகியோருடைய அதிரடி ஆட்டம் அணியை வலுவான நிலைக்கு மாற்றியது. பத்ரிநாத் 47 ஓட்டங்கள். மைக்கல் ஹஸ்ஸி 49 ஓட்டங்கள். டோனி 20 பந்துகளில் 51 ஓட்டங்கள். பிராவோ 14 பந்துகளில் 33 ஓட்டங்கள். இருவரும் ஆட்டமிழக்கவில்லை. பந்து வீச்சில் தவல் குல்கர்னி 3 விக்கெட்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நல்ல ஆரம்பத்தை எடுத்த போதும் விக்கெட்கள் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட வெற்றி வாய்ப்பை இழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களைப் பெற்றது. டுவைன் ஸ்மித் 38 ஓட்டங்கள். பந்துவீச்சில் அணி சார்பாக அல்பி மோர்க்கல், டுவைன் பிராவோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள். பந்து வீசிய 6 பேருமே விக்கெட்களை கைப்பற்றினர். பந்து வீச்சு, களத்தடுப்பு மிக சிறப்பாக அமைந்தமையே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. போட்டியி நாயகன் தலைவர் டோனி. மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேற்றப்பட்டது.


அடுத்த போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ், டெல்லி டெயார் டெவில்ஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது தெரிவுகான் போட்டி. சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 85 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.  முரளி விஜய்யின் தனித்த சதம் 222 ஓட்டங்கள் என்ற பெரிய வெற்றி இலக்கை அணிக்கு வழங்கியது. 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து இந்த ஓட்ட எண்ணிக்கை பெறப்பட்டது. முரளி விஜய் 58 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றார். டுவைன் பிராவோ 12 பந்துகளில் 33 ஓட்டங்கள். வரோன் அருண் 2 விக்கெட்களைக் கைப்பற்றினாலும் 63 ஓட்டங்களை வழங்கினார். இந்த தொடரில் கூடுதலான விக்கெட்களைக் கைப்பற்றிய மோர்னி மோர்க்கல் ஏன் இந்த போட்டியில் விளையாடவில்லை என்பது மிகப் பெரிய கேள்வி. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 16.5 ஓவர்களில் 135 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கெட்களையும் இழந்தது. மஹேல ஜெயவர்தன 55 ஓட்டங்கள். அஷ்வின் 3 விக்கெட்களையும், ஷாடப் ஜகார்த்தி 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். போட்டியின் நாயகன் முரளி விஜய்.


இறுதிப் போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியாக அமைந்தது. இறுதிப் போட்டிக்கான அதே விறு விறுப்பு இந்த போட்டியிலும் இருந்தது. நாணய சுழற்சில் வெற்றி பெற்று முதலில் துடுபெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பம் ஹஸ்ஸி, விஜய் ஆகியோருக்கிடையில் சிறப்பாக அமைந்தது. 87 ஓட்டங்களை இருவரும் பகிர்ந்தனர். முரளி விஜய் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க சுரேஷ் ரெய்னா களமிறங்கினார். இவரும் ஹஸ்ஸியும் இணைந்து 73 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். மைக்கல் ஹஸ்ஸி 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ரெய்னா இறுதிப் பந்தில் 73 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டோனி ஆட்டமிழக்காமல் 14 ஓட்டங்கள். பந்து வீச்சில் ஜக்ஸ் கலிஸ், சகிப் அல் ஹசன், ராஜாத் பாத்தியா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்கள். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது. கடந்த போட்டிகளில் சிறப்பாக துடுபெடுத்தாடிய கம்பீர் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க கலிஸ், மன்விந்தர் பிஸ்லா ஆகியோருடைய இணைப்பாட்டம் வெற்றியை நோக்கி சென்றது. இவர்களுடைய இணைப்பாட்டம் 136 ஓட்டங்களை தந்து. பிஸ்லா 89 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ச்சியாக மேலும் இரண்டு விக்கெட்கள் வீழ்ந்தன. சென்னை சுப்பர் கிங்க்ஸ் பக்கமாக வெற்றி வாய்ப்பு திரும்பியது. 2 ஓவர்களில் 20 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலை. இறுதியாக ஜாக்ஸ் கலிஸ் 69 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க 13 பந்துகளில் 15 ஓட்டங்கள் தேவை என்ற நிலை. கடைசி ஓவரலில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலை. பிராவோவின் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ஓட்டங்கள் பெறப்பட்டன. அடுத்த இரண்டு பந்துகளில் மனோஜ் திவாரி நான்கு ஓட்டங்களை பெற வெற்றி கொல்கொத்த நைட் ரைடர்ஸ் அணிக்கு கிடைத்தது. 5 விக்கெட்களால் வெற்றி பெற்று முதல் தடவையாக சாம்பியன் ஆனது.


போட்டியின் நாயகனாக மன்விந்தர் பிஸ்லா தெரிவானார். போட்டி தொடரின் நாயகனாக சுனில் நரையன் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த வளர்ந்து வரும் வீரராக கிங்க்ஸ் 11 பஞ்சாப் அணி சார்பாக விளையாடிய மந்தீப் சிங் தெரிவானார். ஊதா நிற தொப்பி மோனி மோர்கலுக்கும், செம்மஞ்சள் நிற தொப்பி க்றிஸ் கெயிலுக்கும் கிடைத்தன. வாக்களிப்பின் படி தெரிவான சிறந்த வீரருக்கான கார் ஏபி. டி. வில்லியர்சுக்கு கிடைத்தது. கனவான் தன்மையாக விளையாடிய அணியாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி புள்ளிகளின் அடிப்படையில் தெரிவானது.

துடுப்பாட்டத்தில் முன்னிலையில் உள்ளவர்கள்
க்றிஸ் கெயில்                   15    14    733    128    61.08    1    7
கௌஹம் கம்பீர்              17    17    590    93    36.87    0    6
சிகர் தவான்                         15    15    569    84    40.64    0    5
அஜிங்கயா ரெஹானே   16    16    560    103*    40.00    1    3
விரேந்தர் ஷேவாக்           16    16    495    87*    33.00    0    5

பந்து வீச்சில் முன்னிலையில் உள்ளவர்கள்
மோர்னி மோர்க்கல்         16    16    453/25        20/4    18.12
சுனில் நரையன்                 15    15    324/24        19/5    13.50
லசித் மாலிங்க                   14    14    350/22        16/4    15.90
உமேஷ் யாதவ்                  17    17    453/19        19/3    23.84
வினை குமார்                     15    14    480/19         22/3    25.26
டேல் ஸ்டைன்                   12    12    285/18          8/3    15.83

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளை வென்றது  

இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது இங்கிலாந்து அணி. லோர்ட்சில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கெட்களையும் இழந்து 243 ஓட்டங்களை பெற்றது. சிவ்நரேன் சந்தர்போல் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களைப் பெற்றார். ஏட்ரியன் பரத் 42 ஓட்டங்கள். பந்துவீச்சில் ஸ்டுவோர்ட் ப்ரோடின் பந்து வீச்சு அபாரமாக அமைந்தது. 7 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலளித்த இங்கிலாந்து அணி 398 ஓட்டங்களைப் பெற்றது. அன்று ஸ்ட்ரோஸ் 122 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இயன் பெல் 61 ஓட்டங்களைப் பெற்றார். ஜொனதன் ட்ராட் 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சராசரியான இணைப்பாட்டங்கள் இங்கிலாந்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றது. பந்து வீச்சில் கிமர் ரோச், ஷனோன் கப்ரியல் ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். டரின் சமி 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். தங்கள் இரண்டாவது இன்னிங்க்சில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 345 ஓட்டங்களைப் பெற்றது. சிவ்நரேன் சந்தர்போல் 91 ஓட்டங்களையும், மார்லன் சாமுவேல்ஸ் 86 ஓட்டங்களையும் பெற்றனர். தினேஷ் ராம்டின்(43), டரின் சமி (37) ஆகியோருடைய துடுப்பாட்டமும் கை கொடுத்தது நல்ல ஓட்ட எண்ணிக்கையை பெற. இரண்டாவது இன்னிங்ஸ்சிலும் ஸ்டுவோர்ட் ப்ரோட் சிறப்பாக பந்து வீசினார். 4 விக்கெட்கள். கிரேம் சுவான் 3 விக்கெட்கள். முதல் இன்னிங்ஸ்சில் போதிய அளவு ஓட்ட எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது மேற்கிந்திய தீவுகள் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.


இங்கிலாந்து அணி 5 விக்கெட்களைக் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இன்னும் கொஞ்சம் தேவை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு என்று சொல்லவே தோன்றுகிறது. இங்கிலாந்து அணி பெற்ற 193 ஓட்டங்களில் அலிஸ்டயர் குக் 79 ஓட்டங்களையும் இயன் பெல் ஆட்டமிழக்காமல் 63 ஓட்டங்களையும் பெற்றனர்.57/4 என்ற நிலையில் இருந்து, இந்த இருவரும் இங்கிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றனர்.  கிமர் ரோச் 3 விக்கெட்களை கைப்பற்றினர். 11 விக்கெட்களைக் கைப்பற்றிய ஸ்டுவோர்ட் ப்ரோட் போட்டியின் நயகனாக தெரிவானார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .