2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

கடந்த வாரக் களங்கள்... (ஜூலை 8 – 15)

A.P.Mathan   / 2012 ஜூலை 21 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்தாவது போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு வெற்றி
ஐந்தாவதும் இறுதியுமான போட்டி மழை காரணமாக குழப்பப்பட்ட போதும் டக் வேர்த் லூயிஸ் முறை அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது. அவுஸ்திரேலிய அணி துடுபெடுத்தாடும் போது மழை பெய்தமையினால் போட்டி 32 ஓவர்களாக மாற்றப்பட்டது.

அவுஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜோர்ஜ் பெய்லி ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் 32 ஓட்டங்களையும், பெற்றனர். பந்து வீச்சில் ஜேம்ஸ் ட்ரெட்வெல், ரவி போபர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். பதிலளித்த இங்கிலாந்து அணிக்கு 29 ஓவர்களில் 138 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 27.1 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து அந்த வெற்றி இலக்கை அவர்கள் அடைந்தார்கள். அலஸ்டியர் குக் 58 ஓட்டங்களையும், ரவி போபரா ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களையும் பெற்றனர். போட்டியின் நாயகனாக ரவி போபராவும், தொடர் நாயகனாக இயன் பெல்லும் தெரிவாகினர். இங்கிலாந்து அணி தொடரை 4 - 0 என கைப் பற்றியது.

இலங்கை, பாகிஸ்தான் மூன்றாவது டெஸ்ட் போட்டி சமநிலையில். இலங்கை அணிக்கு தொடர்
இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதி டெஸ்ட் போட்டி கண்டி பல்லேகேல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முடிவு காணப்படக் கூடிய போட்டி மழை காரணமாக சமநிலையில் நிறைவடைந்தது. இலங்கை அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்புக்கள் இருந்தும் இலங்கை அணி தவறவிட்டது. பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற எத்தனித்து தங்கள் துடுப்பாட்டத்தை நிறுத்தி இலங்கை அணியை துடுப்பாட வைத்தது. ஆரம்பம் வேகமாக வெற்றியை நோக்கி இருந்தாலும் மூன்று விக்கெட்கள் வீழ்த்தப்பட சமநிலை நோக்கி துடுபெடுத்தாடியது. மஹேல ஜெயவர்தன இருந்தும் அப்படி துடுபெடுதாடியது இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமே. திசர பெரேரா இருந்தும் அவரை அடித்தாடக் கூடிய வகையில் களமிறக்கி இருக்கலாம், செய்யவில்லை. முதலில் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்களையும் இழந்து 226 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆசாத் சபிக் 75 ஓட்டங்களையும், மிஸ்பா உல் ஹக் 40 ஓட்டங்களையும் பெற்றனர். திசர பெரேரா பந்து வீச்சில் மிக சிறப்பாக செயற்ப்பட்டார். நான்கு விக்கெட்களைக் கைப்பற்றினார். அவருடைய மீள் வருகைப் போட்டி. இனி டெஸ்ட் அணியிலும் அவருக்கு நிச்சய இடம் இனி உண்டு. நுவான் குலசேகர இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினார். 
பதிலளித்த இலங்கை அணி 337 ஓட்டங்களைப் பெற்றது. இதில் தரங்க பரனவித்தாறன, திசர பெரேரா ஆகியோர் 75 ஓட்டங்களைப் பெற்றனர். திலான் சமரவீர 73 ஓட்டங்களையும் பெற்றனர்.பாகிஸ்தானின் பந்து வீச்சில் ஜுனைத் கான் 5 விக்கெட்கள். சைட் அஜ்மல் 3 விக்கெட்கள். இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 380 ஓட்டங்களைப் பெற்று இறுதி நாளில் ஆட்டத்தை நிறுத்தியது. ஆஷர் அலி 136 ஓட்டங்களையும் ஆசாத் சபிக் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்களையும், டில்ஹாரா பெர்னாண்டோ 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 270 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 195 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. தினேஷ் சந்திமால் 65 ஓட்டங்களையும், குமார் சங்ககார ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும்  பெற்றனர். பந்து வீச்சில் சைட் அஜ்மல் 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ஆசாத் சபிக் தெரிவானார். தொடர் நாயகனாக குமார் சங்ககார தெரிவானார்.

நியூசிலாந்து அணிக்கு மூன்றாவது போட்டியில் வெற்றி
மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி ஈடுபட்டது. துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ரொப் நிகோல் 59 ஓட்டங்களையும், நேதன் மக்லம் 50 ஓட்டங்களையும், வொட்லிங் 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் அன்றே ரஸல் 4 விக்கெட்களையும், டுவைன் பிராவோ 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 161 ஓட்டங்களிற்கு சகல விக்கெட்களையும் இழந்தது. அன்றே ரசல் ஆட்டமிழக்காமல் இறுதி நேரத்தில் 42 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். மற்றையவர்கள் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி 88 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் ட்ரென்ட் பௌல்ட், ஜெகப் ஓரம், நேதம் மக்லம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். போட்டியின் நாயகனாக ரொப் நிகோல் தெரிவானார்.  

தொடர் வெற்றியை உறுதி செய்தது மேற்கிந்திய தீவுகள் அணி
நான்காவது போட்டி கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 24 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடர் வெற்றியை உறுதி செய்ததது. முதலில் துடுபெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றது. கேரன் போலர்ட் 56 ஓட்டங்களையும், மார்லன் சாமுவேல்ஸ் 46 ஓட்டங்களையும் பெற்றனர். பின் வரிசை வீரர்களின் சராசரியான துடுப்பாட்டம் வெற்றி இலக்கு ஒன்றை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணியை எடுத்துச் சென்றது. பந்து வீச்சில் டிம் சௌதி, ஜெகப் ஓரம் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தனர். பதிலளித்த நியூசிலாந்து 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் 240 ஓட்டங்களைப் பெற்றது. ரொஸ் டெய்லர் தனித்து நின்று 110 ஓட்டங்களை அடித்துக் கொடுத்தார். பந்து வீச்சில் டினோ பெஸ்ட் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். சுனில் நரையன் 10 ஓவர்களில் 20 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றி போட்டியின் நாயகனாக தெரிவானார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடர்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடர் கடந்த வாரம் நிறைவுக்கு வந்து இருந்தது. 13 நாட்கள் இந்தப் போட்டி தொடர் நடைபெற்று இருந்தது. 14 பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டி தொடரின் முடிவுகள் சில எதிர்பார்த்தது போன்றே வந்து இருந்தன. சில முடிவுகள் எதிர்பார்க்காதவையும் கூட.

ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் சுவிச்சர்லாந்தின் ரொஜர் பெடரர் மற்றும் பிரித்தானியாவின் அண்டி முரே ஆகியோர் மோதி இருந்தனர். இந்தப் போட்டியில் ரொஜர் பெடரர் 4- 6, 7-5, 6- 3 ,6-4  என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் போலந்தின் அக்னிஎஸ்கா ரட்வன்ஸ்கா ஆகியோர் மோதி இருந்தார்கள். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-1 , 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றார். 

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டிகளில் இறுதிப் போட்டியில் ஜொனதன் முரே (பிரித்தானியா), பிரெட்ரிக் நீல்சன்(டென்மார்க்) இணைந்த ஜோடி 4-6, 6-4, 7-6(5), 6-7,(5), 6–3 என்ற செட் கணக்கில் ரொபேர்ட் லின்ட்செட்( பிரித்தானியா), ஹொரியா டகேயு (ரொமேனியா) ஜோடியை வெற்றி கொண்டது.

பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் அமெரிக்க ஜோடியான செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் செக் குடியரசின் அண்ட்ரியா லவகோவா, லூய்சி ரடேக்கா ஜோடியை 7-5 , 6-4, என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆகினர்.

கலப்பு இரட்டையர் பிரிவு போட்டிகளில் அமெரிக்காவின் மைக் பிரைன், லிசா ரேய்மொன்ட் ஜோடி இந்தியாவின் லியாண்டர் பயஸ், ரஷ்யாவின் இலினா வெஸ்நினா ஜோடியை 6-3, 5-7, 6-4  என்ற செட் கணக்கில் வெற்றி கொண்டது.
 
விம்பிள்டன் போட்டிகளில் மிக முக்கியமான போட்டிகளாக கருதப்படுபவை இந்த போட்டிகளே.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .