Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 21, வியாழக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 08 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதர்களை அடையாளப்படுத்துவதற்கு பெயர் ஒரு முக்கிய குறியீடாக உள்ளது. மனிதர்களுக்கு பெயர் வைக்கும் வழக்கம் இல்லை என்றால் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள். ஒருவரை ஒருவர் தொடர்புக்கொள்வது, ஒருவர் மற்றொருவரை அழைப்பது என எதுவும் செய்ய முடியாது. எனவே மனிதர்களுக்கு பெயர் வைப்பது ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு முன்பு நிறைய ஆராச்சியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக நல்ல பெயராக இருக்க வேண்டும், அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும், ஆன்மீக பெயராக இருக்க வேண்டும், புரட்சியாளர்களின் பெயராக இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்கின்றனர்.
நம் நாட்டை பொருத்தவரை பெயர் வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. யார் வேண்டுமானாலும் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். ஆனால் பல உலக நாடுகளில் குறிப்பிட்ட பெயர்களை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அந்த பெயர்களை வைத்தால் அதற்கான தண்டனைகளும் கடுமையாக உள்ளது.
பிரிட்டன் :
பிரிட்டனில் குடும்ப பெயர்களுக்கு கட்டுப்பாடு இல்லாவிட்டாலும், பெயர்களை வைப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி பெயர்கள் தனி நபரையோ அல்லது ஒரு தரப்பினரையோ புண்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. எண்கள் அல்லது குறியீடுகள் இருந்தால் அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும். குறிப்பாக பெயர்களுக்கு பின்னால் “II” அல்லது “III” பயன்படுத்திக்கொள்ளலாம்.
அமெரிக்காவின் பிறப்பு சான்றிதழின்படி, குறிப்பிட்ட பெயர்களை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராஜா, ராணி, இயேசு, இயேசு கிறிஸ்து, சாண்டா கிளாஸ், அடால்ஃப் ஹிட்லர், மெசியா உள்ளிட்ட பெயர்கள் வைப்பதற்கு அனுமதியில்லை.
இன்னும் சில நாடுகளின் மிகவும் கடுமையான கட்டுப்படுகள் உள்ளன. சில நாடுகளில் பெயரை மாற்ற நீதிமன்றம் வரை செல்ல வேண்டும். அவ்வாறு நீதிமன்றத்தில் பெயர் மாற்றம் செய்வதற்கான உங்கள் மனு நிராகரிக்கப்பட்டால் உங்களால் பெயரை மாற்ற முடியாது.
உலக அளவில் தடை செய்யப்பட்டுள்ள பெயர்கள் :
சீஃப் மேக்சிமஸ், ரோபோகாப், செக்ஸ் ஃபுரூட், லிண்டா, இஸ்லாம், சாரா, ஒசாமா பின் லேடன், மெட்டாலிக்கா, பிரின்ஸ் வில்லியம், டெவில், ப்ளூ, சுண்டி, கோரன், தோர், கிரீஸ்மேன், தலுலா ஹவாய், டாம், கேமில்லா உள்ளிட்ட பெயர்களை பல்வேறு உலக நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago