2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

வியக்கவைக்கும் குழந்தை

Ilango Bharathy   / 2021 ஜூன் 24 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்கு இங்கிலாந்தின் சுர்ரே பகுதியில், மார்ச் மாதம் 1ஆம் திகதி பிறந்த குழந்தையொன்றின்  தோற்றமானது, பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

‘டேவிட் டொரோனினா‘(David Doronina )எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இக் குழந்தையின் அடர்த்தியான அழகிய தலைமயிரைப் பார்த்துப்  பலரும்  இங்கிலாந்தின்  பிரதமர் போரிஸ் ஜோன்சனின்( Boris Johnson) தோற்றத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்.



மேலும் இக் குழந்தையானது  ஏனைய குழந்தைகளோடு ஒப்பிடுகையில் அதிக தலைமயிருடன் வித்தியாசமாகக் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்து அக் குழந்தையின் தாயான டட்டியானா கருத்துத் தெரிவிக்கையில் "என் குழந்தை  பிறந்த போது, மருத்துவமனையிலிருந்த தாதியர் குழந்தை பிரதமர் போரிஸ் ஜோன்சன் போன்று இருப்பதாக கூறினார்கள்.

தற்பொழுது குழந்தையைத்  தூக்கிக்கொண்டு  எங்கு சென்றாலும் அதை பார்ப்பவர்கள் எங்களை நிறுத்தி அதன் தோற்றம் பற்றி விமர்சித்து விட்டுச் செல்கின்றனர்.

எல்லோரும்  என் குழந்தையைப் பார்த்து ஆச்சரியம் அடைவதால் என் குழந்தையும்  ஒரு பிரபலத்தைப் போன்று மாறிவிட்டது ” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X